search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒண்டி வீரன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
    • தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

    தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார். மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்.
    • ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!

    2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி!

    ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×