search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை
    X

    யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை

    பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

    தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!

    கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

    தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!
    Next Story
    ×