search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ ஆர் ரஹ்மான்"

    • திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பொங்கல் தினத்தில் படம் வெளியாக உள்ளது. கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்தது.

    இதனையடுத்து லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான 'தேர் திருவிழா' நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகும் இந்த தேர் திருவிழா பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

    • ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா.
    • பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார்.

    பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தில் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தில் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.


    பம்பா பாக்யா

    சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் "எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…" என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.

    இவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகர் பம்பா பாக்யா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடா 'மார்க்கம்' நகரின் (Markham city) மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி, கவுன்சிலர், இந்திய தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடிய மக்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    ஏ.ஆர்.ரஹ்மான் என்பது என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது. எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

    என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர். சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் பழம்பெரும் ஜாம்பவான்கள் உத்வேகத்தை அளித்தார்கள். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

    ஒருவேளை நான் சோர்வடைந்தாலும், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.


    ஏ.ஆர். ரஹ்மான்

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.


    ஏ.ஆர். ரஹ்மான்

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.


    மு.க.ஸ்டாலின் -  ஏ. ஆர். ரஹ்மான்

    இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள திரைப்படம் மலையன் குஞ்சு.
    • மலையன் குஞ்சு திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

    ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.


    மலையன் குஞ்சு

    விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இப்படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு இயக்குனர் மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படதின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.


    முதலமைச்சர் ஸ்டாலின்

    இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றுள்ளது.


    ஏ. ஆர். ரஹ்மான்

    முதலமைச்சரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேப்பியர் பாலத்தில் விளம்பர படப்பிடிப்பிற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×