பகத் ஃபாசில் நடிப்பில் ரஹ்மான் இசையில் வெளியான டிரைலர்

இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள திரைப்படம் மலையன் குஞ்சு.மலையன் குஞ்சு திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பகத் ஃபாசில் - ஏ.ஆர். ரஹ்மான்
பகத் ஃபாசில் - ஏ.ஆர். ரஹ்மான்
Published on

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.

மலையன் குஞ்சு

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இப்படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு இயக்குனர் மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படதின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com