search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்"

    • போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார்.
    • பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தோவாளை சி. எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங் கலை மற்றும் முதுகலை பொறியியல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார். தாளாளர் எபனேசர் ஜோசப் தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர் குமரிப் பேராயர் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை, உண்மை மற்றும் நன்றியுணர்வோடு வாழ்ந்து உலகில் சாதனை யாளர்களாக மாற வேண்டும் என்றார்.

    குமரிப் பேராய நலிவுற்றோர் வளர்ச்சித் துறையின் இயக்குனர் லாரன்ஸ், கல்லூரியின் காசாளர் பொன். சாலமோன், மாணவிகள் பிரெய்சலி, அகுள் மேரி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர். முதுநிலை வணிக நிர்வாகத்துறை தலைவர் நாக்ஸன் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவருக்கு உதவித்தொகையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். அப்போது மகாலிங்கம் என்ற மாணவர் எம்.எல்.ஏ.வை சந்தித்து தான் நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் புத்தகம், கல்வி கட்டணம் செலுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தார். இதனை பரிசீலிப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., மாணவர் மகாலிங்கத்தை சந்தித்து கல்வி உதவித்தொகையாக தனது ஒருமாத ஊதியம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவர் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறினார். அப்போது தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், சிறந்த முறையில் மருத்துவக்கல்வி பயின்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை ஆற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன் காளீஸ்வரி மாரிச்செல்வம் , ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் ரத்த பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ஏரி

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார். பின்னர் போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அப்போது கன்னங்குறிச்சி புது ஏரி பகு தியை காட்டியது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஏரிக்கரையில் சர ணின் மோட்டார் சைக்கிள், செல்போன், செருப்பு, ஐ.டி.கார்டு ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் தேடினர். பிற்பகல் 3 மணி யளவில் சரணின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிண மாக மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் உற வினர்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சரண் சரியாக படிக்காத தால் சரணை மன வேதனை யில் இருந்த சரண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 77 தவறிய அழைப்புகள் கிடந்தன. ஆனால் அவரது செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால் யார், யாரிடம் இருந்து போன் வந்தது. கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சரணின் செல் போனில் 77 தவறிய அழைப்புகள் கிடந்ததால் சரணை காணாததால் அவ ரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு போன் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    செல்போன் ஆய்வு

    மேலும் இன்று அந்த செல்போனை திறந்து பார்த்து ஆய்வு செய்ய போலீ சார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் யார், யாரி டம் பேசி னார், யார் யாரிடம் இருந்து போன் வந்தது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்த னர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • தனுஷ் தயாநிதி சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் சிவசிவா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் தனுஷ் தயாநிதி (வயது 22). இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு அருகில் ராம்நாத் என்பவரின் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அப்போது அந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை தனுஷ் தயாநிதி நிறுத்த சென்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து தனுஷ் தயாநிதியின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளம் பஸ் நிறுத்தத்தில் மர்மமாக கல்லூரி மாணவர் இறந்து கிடந்தார்.
    • கொலையா? போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவரது மகன் விஜயகுமார் (வயது19). இவர் ஆலங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் கே.லெட்சுமியாபுரம் பஸ் நிறுத்தத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரது மூக்கு, கால் முட்டிகள், இடுப்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இடது கண் அருகிலும் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து ஜோதிமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவர் எப்படி இறந்தார்? அவர் சாவுக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

     உடுமலை, ஜூலை.30-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது. துறைச் செயலருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    துறையின் இணைச் செயலருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்ந்து எடுத்தனர். பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலருக்கான போட்டி நடைபெற்றது.

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்து எடுத்தனர்.இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாகத் துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலர் மற்றும் மகளிர் செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ஆ.யுவராஜ், துணைத்தலைவராக சை.முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக சி.கோகுல்நாத், மகளிர் செயலராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

    தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    • 2023-24- ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்பத்துடன் செல்போன் எண், மாணவரின் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா நடந்தது.
    • ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டிற்கான மாணவர் தலைமைப் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் தேர்தலில் மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து, கணினி மின்னனு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் மாணவர் தலைவராக ஷ்ராவ்யா, மற்றும் துணைத் தலைவராக ஆதித்ய ராஜ் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இவர்க ளுக்கான பதவியேற்பு விழா பள்ளியின் விழா அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்புத்துறை தலைமைத் தளபதி சங்கர் குமார் ஜா கலந்து கொண்டார்.

    பள்ளியின் தாலாளர் சத்யன் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இன்று நீங்கள் பள்ளியில் கற்கும் செயல்களே நாளை சமுதாயத்தில் உங்களை நிலைநிறுத்தும் தூணாகும். இப்பள்ளியின் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கால இந்தியாவின் தலைவர்கள். இன்று பள்ளியில் வாக்களித்தது நாளை இந்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு முன்னோட்டமாகும்.

    தலைமைப்பண்பு தனித்துவம் போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் முகங்கள் என்றும், பள்ளியின் சட்டத்தை மதித்தால் தான் நாளை நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ முடியும் என்றார். முடிவில் முதல்வர் தேவராஜலு நன்றி கூறினார்.

    • யார், எதற்காக சுட்டுக்கொன்றார்கள்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.
    • அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் கைப்புழா பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவரது மனைவி ராணி. இவர்களது குழந்தைகள் ஜாக்சன்(வயது17), ஜோதி, ஜோசியா, ஜாஸ்மின்.

    சன்னி, தனது மனைவி ராணியுடன் 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். ராணி அமெரிக்கா கலிபோர்னியா நகரில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அங்கேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    அவரது குழந்தைகள் அங்குள்ள கல்வி நிலையங்களில் படித்து வந்தனர். உறவினர்களை பார்க்க எப்போதாவது கேரளாவுக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்திருக்கிறார்.

    இந்நிலையில் சன்னியின் மகன் ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை யார், எதற்காக சுட்டுக்கொன்றார்கள்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. ஜாக்சன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அவரது தாய் ராணி, கேரளா கைப்புழாவில் உள்ள தனது சகோதரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

    ஜாக்சனின் இறுதிச் சடங்கு அமெரிக்காவிலேயே நடைபெறும் என்று கேரளாவில் உள்ள தனது உறவினர்களுக்கு ராணி தகவல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நித்தீஷ் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
    • அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூரை சேர்ந்தவர் மணியன். இவரது மகன் நித்தீஷ் (வயது 15).

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நித்தீஷ் மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அறிவியல் ஆசிரியை, மாணவர் விளையாடுவதை பார்த்தார்.

    பின்னர் அவர் நித்தீஷின் அருகே சென்று அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்து பள்ளிக்கு வெளியே விட்டார். அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை இப்படி நடந்து கொண்டதால் மாணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    வீட்டிற்கு சென்ற நித்தீஷ் ஆசிரியையின் இந்த செயலால் மிகுந்த மனவேதனை அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தங்களது மகனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நித்தீஷை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    • கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது.

    பல்லடம்:

    கரூர் அருகே உள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண் (வயது 22). இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று கரூரில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடம் அருகே சென்ற போது, நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அந்த வழியாக சென்ற போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சரணின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×