search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா
    X

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

    மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா நடந்தது.
    • ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டிற்கான மாணவர் தலைமைப் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் தேர்தலில் மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து, கணினி மின்னனு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் மாணவர் தலைவராக ஷ்ராவ்யா, மற்றும் துணைத் தலைவராக ஆதித்ய ராஜ் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இவர்க ளுக்கான பதவியேற்பு விழா பள்ளியின் விழா அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்புத்துறை தலைமைத் தளபதி சங்கர் குமார் ஜா கலந்து கொண்டார்.

    பள்ளியின் தாலாளர் சத்யன் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இன்று நீங்கள் பள்ளியில் கற்கும் செயல்களே நாளை சமுதாயத்தில் உங்களை நிலைநிறுத்தும் தூணாகும். இப்பள்ளியின் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கால இந்தியாவின் தலைவர்கள். இன்று பள்ளியில் வாக்களித்தது நாளை இந்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு முன்னோட்டமாகும்.

    தலைமைப்பண்பு தனித்துவம் போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் முகங்கள் என்றும், பள்ளியின் சட்டத்தை மதித்தால் தான் நாளை நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ முடியும் என்றார். முடிவில் முதல்வர் தேவராஜலு நன்றி கூறினார்.

    Next Story
    ×