search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக்கொலை
    X

    அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக்கொலை

    • யார், எதற்காக சுட்டுக்கொன்றார்கள்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.
    • அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் கைப்புழா பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவரது மனைவி ராணி. இவர்களது குழந்தைகள் ஜாக்சன்(வயது17), ஜோதி, ஜோசியா, ஜாஸ்மின்.

    சன்னி, தனது மனைவி ராணியுடன் 1992-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். ராணி அமெரிக்கா கலிபோர்னியா நகரில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அங்கேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    அவரது குழந்தைகள் அங்குள்ள கல்வி நிலையங்களில் படித்து வந்தனர். உறவினர்களை பார்க்க எப்போதாவது கேரளாவுக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்திருக்கிறார்.

    இந்நிலையில் சன்னியின் மகன் ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை யார், எதற்காக சுட்டுக்கொன்றார்கள்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. ஜாக்சன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அவரது தாய் ராணி, கேரளா கைப்புழாவில் உள்ள தனது சகோதரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.

    ஜாக்சனின் இறுதிச் சடங்கு அமெரிக்காவிலேயே நடைபெறும் என்று கேரளாவில் உள்ள தனது உறவினர்களுக்கு ராணி தகவல் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் கேரள மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேரள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×