search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.
    • நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

    இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை வாதமும், மதவாதமும் அதிகரித்துவிட்டது. பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று அதன் அஜன்டாவை நிறைவேற்றி வருகிறது. தேசிய கல்வி கொள்கை, அயோத்தியில் ராமர் கோவில், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என்று பலவற்றை செய்து உள்ளது. இந்திய அரசியலமைப்பை மாற்றும் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்டு உள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
    • நிறுவன தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தினை இன்று தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன தினம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

    139-வது நிறுவன தினத்தையொட்டி "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, அடிப்படை தினத்தில் காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளில் இருந்து விலகாது. முன்னேறும் என்ற செய்தியை தெரிவிப்பது கடமையாகும். நாக்பூரில் ஒரு செய்தியை வழங்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகிறோம்" என்றார்.

    139-வது நிறுவன தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தினை இன்று தொடங்குகிறது. பிரமாண்ட பொதுக்கூட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று மாலை நடக்கிறது.

    "நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்ற தலைப்பில் இந்த பொதுக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது. இதில் 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா, 3 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    • அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு கோவையிலிருந்து 50 வாகனத்தில் செல்ல தீர்மானம்

    கோவை, 

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபை துர் ரஹ்மான் தலைமையில் உக்கடம் சாக்கு வியாபா ரிகள் சங்க கட்டிடத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், மத்திய மாவட்ட பொறு ப்பாளர் ராமகிருஷ்ணன், பாராளுமன்ற துணை பொறுப்பாளர் பால்ராஜ், தொகுதி செயலாளர்கள் கவுண்டம்பாளையம் தொகுதி செயலாளர் சரத் சக்தி, தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் அசிரியா, வால்பாறை தொகுதி செயலாளர் மதிவாணன், திருப்பூர் தெற்கு தொகுதி செயலாளர் செல்வராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் கண்மணி, குனியமுத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், குனியமுத்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் தம்பு, வால்பாறை இளைஞர் அணி செயலாளர் ஆறு முகம், குனியமுத்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி பிரமாண்ட கூட்டத்துக்கு கொங்கு மண்டலத்தின் சார்பாக 50 வாகனத்தில் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
    • தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக மன்னார்குடி காந்தி சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பந்தலடி, மகாமாரியம்மன் கோவில் தெரு, ருக்மணி பாளையம், தேரடி, பெரிய கடைவீதி வழியாக சென்று கீழராஜ வீதியில் முடிவடைகிறது.

    இதில் சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் அணிவகுத்து சென்றனர்.

    தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வி.ஜி.கே. மணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

    பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

    தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

    இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

    எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    • உங்களிடம் பேச வேண்டும் என இளம்பெண் ஒருவர் டவர் மீது ஏறினார்.
    • இதைக் கண்ட பிரதமர் மோடி இளம்பெண்ணின் செயலால் அதிர்ச்சியடைந்தார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென டவர் மீது வேகமாக ஏறினார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை பிரதமர் சமாதானப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார். இளம்பெண் டவர்மீது ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, தயவுசெய்து கீழே இறங்குங்கள் என பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டார். உங்களிடம் நான் பேசுகிறேன் என பிரதமர் கூறியதை அடுத்து, அப்பெண் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதலமைச்சர் தலித் எனக்கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பிடுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அத்தனை அரசியல் கட்சிகளும் மடிகா சமூக மக்களை மோசம் செய்தன. தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி அதை நிறைவேற்றவில்லை, அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனதாகவும் குற்றம் சாட்டினார்.

    • அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் கல்லல் பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க.வின்

    52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கொள்கை பரப்பு துணை செயலா ளரும், முன்னாள் அமைச்ச ருமான மாப.பாண்டிய ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எடப்பாடியார் எண்ணத் திற்கு ஏற்ப எதிர்காலத்தில் வர இருக்கின்ற தேர்தல் மற்றும் கழகத்தினுடைய வளர்ச்சி பணியை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி இதை நாம் செய்துவிட்டால் தி.மு.க. வினர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது பொதுமக்கள் இந்த ஆட்சியை தூக்கிப் போட நினைத்து விட்டார் கள்.

    சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படி யான வாக்கு வித்தியா சத்தில் நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைத்து இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    ஆளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் எங்கே? என்று கேட்டால் நிலம் இருக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார். நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேட்டால் கார் இருக்கிறது என்கிறார். இப் படி வாக்குறுதி கொடுக்கும் போது அனைவருக்கும் தருவேன் என்றவர் இப் போது கொடுக்காமல் இருப்பதற்கான கார ணங்களை தேடி கொண்டி ருக்கிறார்.

    பொது மக்களிடம் எந்த பொய்யை கூறினால் வாக்கு களை பெறலாம் என்பது தி.மு.க.வினர் கை தேர்ந்த வர்கள் என்றும், ஆட்சிக்கு வந்த பின் அதனை நிறை வேற்ற மாட்டார்கள் என்றும், தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன் செந்தில்குமார், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ் செல்வன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செங்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன் னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தலைமைக் கழக பேச்சாளர் சிங்கை.அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆர்.கே.ரவிச் சந்திரன் பேசியதாவது:-

    தமிழக மக்களிடம் நிறை வேற்ற முடியாத திட்டங்க ளையெல்லாம் நிறைவேற்று வதாக கூறி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் இந்த 2½ ஆண்டு காலத்தில் மக்களை வாட்டி வதைக்கும் செயல்கள்தான் நடை பெற்று வருகிறது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலா ளர்கள் அம்மன்பட்டி ரவிச் சந்திரன், பூமிநாதன், ராமமூர்த்திராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் வீரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முனி யாண்டி, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை சார்பில் வெளியிடப்ப ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சை உட்பட டெல்டா மாவட்ட ங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மது பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திரும்ப பெரும் அரசு தி.மு.க. அரசு.
    • ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன் விழா மைதானத்தில் அ.தி. மு.க. பொதுசெயலாள ரும், முன்னாள் முதலமைச்சரு மான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கு இணங்க விருது நகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராஜபாளை யம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான ராஜேந்திரன், தலை மைக்கழக பேச்சாளர் பேரா வூரணி திலீபன் பேசினர். இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி யதாவது:-

    ராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதிகள், தற்போது நடைபெற்று வருகின்ற நான்கு வழிச்சாலை உள் ளிட்ட அனைத்து பணிகளுக் கும் நான் தான் அடிக்கல் நாட்டினேன். தற்போது இவர்கள் பார்வையிட்டு கமிஷன் மட்டும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பாட்டு பாடி பெயர் வாங்க வேண்டும். இவர்கள் குற்றம் கண்டு பேர் வாங்கிட நினைக்கிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத் தில் ஏழை, எளிய மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. அரசால் வழங்கப்படும் மகளிர் உரி மைத்தொகை என்ற பெய ரில் 40 சதவீதம் பேருக்கு தான் பணம் வழங்கப் பட்டு வருகிறது. அதிலும் பிரச் சினை ஏற்பட்டுள்ளது.

    ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு மதுபானத்திற்கு 30 ரூபாய் விலை ஏற்றியுள்ள னர். இதனால் ஆண்கள் குடிப்பதற்கு வழி செய்து விட்டு நயவஞ்சகமாக அதில் ஐந்து மடங்கு வருவாயை தி.மு.க. அரசு ஈட்டி வருகி றது. மின் கட்டண உயர்வால் ராஜபாளையத்தில் பல நூற் பாலைகள் மூடப்பட்டு வரு கின்றன.இந்த நிலை மாற வேண் டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். யார் பிரதமர் என எடப்பாடி தீர்மானிக்க வேண்டும், இல்லை எடப்பாடி பிரதம ராக வேண்டும்.

    இவ்வாறு அவர் ேபசி னார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செய லாளர் எஸ்.என்.பாபுராஜ், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலா ளர்கள் ஆர்.எம்.குருசாமி (வடக்கு), நவரத்தினம் (தெற்கு), மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கெளரவ தலைவர் குருசாமி,

    மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகா புரியான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செய லாளர்கள் சோலைமலை, யோகசேகரன் நன்றி கூறினர். கூட்ட ஏற்பாடு களை ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.

    • ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டி யன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன் தொகுப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மருதப்பபுரம் பாண்டியராஜன், அவைத்தலைவர் சண்முக சுந்தரம், துணை செயலாளர் முத்துலெட்சுமி, பசுவதி, வீராணம் வீரபாண்டியன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், நெல்லை வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட மகளிர்அணி செயலாளர் சந்திரகலா, மாவட்ட மாணவரணி செய லாளர் பிரேம்குமார், மாவட்ட தொழிற்சங்க செய லாளர் குத்தாலிங்கம், மாவட்ட விவசாய அணி கிருஷ்ணசாமி, மாவட்ட ஐடி விங் மகபூப் மசூது, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், கீழப்பாவூர் மேற்கு அமல்ராஜ், கிழக்கு இருளப்பன், ஆலங்குளம் தெற்கு பாலகிருஷ்ணன், கடையம் வடக்கு அருவேல் ராஜ், கடையம் தெற்கு முருகேசன், பாப்பாக்குடி டி.கே.சுப்பிரமணியன், கடையநல்லூர் தெற்கு ஜெயக்குமார், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை, சுரண்டை சக்திவேல், பேரூர் செயலாளர்கள் மேலகரம் வக்கீல் கார்த்திக் குமார், குற்றாலம் சேர்மன் கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜன், ஆலங்குளம் கேபி சுப்பிரமணியன், கீழப்பாவூர் ஜெயராமன், முக்கூடல் சகாய அருள் வில்சன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, வக்கீல் அணி சிவக்குமார், ஆலங்குளம் சாந்தகுமார், ராமச்சந்திரன், சதீஷ்குமார், ஜோதி முருகன், முத்துராஜ், வீரபாண்டியன், திருமலைக்குமார், வேல்துரை, ஊத்துமலை இளைய ராஜா குமரேசராஜா, ஊத்துமலை கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கருவந்தா தானியேல் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

    ×