அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
செங்குளத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
செங்குளத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செங்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன் னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தலைமைக் கழக பேச்சாளர் சிங்கை.அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆர்.கே.ரவிச் சந்திரன் பேசியதாவது:-

தமிழக மக்களிடம் நிறை வேற்ற முடியாத திட்டங்க ளையெல்லாம் நிறைவேற்று வதாக கூறி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் இந்த 2½ ஆண்டு காலத்தில் மக்களை வாட்டி வதைக்கும் செயல்கள்தான் நடை பெற்று வருகிறது.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலா ளர்கள் அம்மன்பட்டி ரவிச் சந்திரன், பூமிநாதன், ராமமூர்த்திராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் வீரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முனி யாண்டி, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com