மயிலாடுதுறையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com