search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
    • 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    திருப்பூர் :

    இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதத்துக்கும் அதிகம். குறிப்பாக பருத்தி நூலிழையில் தயாரான பின்னலாடைகள் உற்பத்தியில், திருப்பூர் முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்திநூலிழை ஆடைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் திருப்பூரில் இருந்தே உற்பத்தி செய்து பெறப்படுகின்றன. நம் நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.திருப்பூரில் இருந்து மட்டும் 29 ஆயிரத்து 643 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் 3,383 கோடி ரூபாய்க்கு பின்னலாடைகள் ஏற்றுமதியாகியுள்ளன. திருப்பூரில் இருந்து நடந்த மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் டாப்- 10 ஆடை விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    பருத்தி நூலிழையில் தயாரித்த குழந்தைகளுக்கான பின்னலாடைகள் ரூ.2,998 கோடி , செயற்கை நூலிழை டீ-சர்ட் வகைகள் ரூ.1,866 கோடி, பருத்திநூலிழையில் தயாரித்த பைஜாமா மற்றும் இரவு ஆடைகள் ரூ.1,427 கோடி, இரவு நேர ஆடை மற்றும் பைஜாமா ரூ. 1,038 கோடி.

    பின்னலாடை சட்டை மற்றும் சில ஆடைகள் ரூ.821 கோடி, உல்லன் நூல் குழந்தைகள் பின்னலாடைகள் ரூ. 675 கோடி, பருத்தி நூலிழை டிராயர்கள், அரைக்கால் சட்டை ரூ. 619 கோடி. செயற்கை நூலிழை டிராயர் உள்ளிட்ட ஆடைகள் ரூ. 521 கோடி உட்பட 16 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் டாப் 10 ஏற்றுமதி ரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    திருப்பூரின் மொத்த ஏற்றுமதி 28 ஆயிரத்து 237 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. இதில் டாப் 10 ஆடை ரகங்கள் மட்டும் 16 ஆயிரத்து 831 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் மிக தரம் வாய்ந்த டீ-சர்ட்டுகள், குழந்தைகள் ஆடைகள் மற்றும் இரவு நேர ஆடைகளையே அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். கோடை கால ஆர்டர்களுக்கு ஈடாக குளிர்கால ஆர்டர்களையும், செயற்கை நூலிழைகளை கொண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடந்த 2007 பிப்ரவரி முதல் பருத்தி அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து நீக்கிய பிறகு, இந்திய ஜவுளித்தொழில் சவால்களை சந்தித்து வருகிறது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.,) தளத்தில் நடைபெறும் முன்பேர பருத்தி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், சுரேஷ் கோடக் என்பவர் தலைமையில் ஒரு ஜவுளி ஆலோசனைக் குழுவை அமைத்தது.

    இக்குழு இதுவரை 5 கூட்டங்களை நடத்தியுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பருத்தி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக முயற்சி எடுத்தார். இதன்விளைவாக பருத்தி ஆலோசனைக் குழுவானது முழு ஜவுளி மதிப்பு சங்கிலியை உள்ளடக்கி மறுசீரமைப்பு செய்துள்ளது.

    பருத்தி ஆலோசனைக் குழு மற்றும் செபியின் ஒப்புதலின்பேரில் எம்.சி.எக்ஸ்., கடந்த 13ந் தேதி புதிய ஒப்பந்தத்தை அறிமுகம் செய்தது. இந்த ஒப்பந்தம், ஆயத்த ஆடைகள் உட்பட முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள விவசாயிகள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், நூற்பாலைகள் மற்றும் இதர ஜவுளிப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் வகையில் உள்ளது.

    நாட்டின் பருத்தி நுகர்வு 320 லட்சம் பேல்கள் வரையிலும், உற்பத்தி 360 லட்சம் பேல்கள் வரையிலும் உள்ளது. அதேசமயம் எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தி வணிகம் 3 லட்சம் பேல்கள் என்ற அளவில்தான் உள்ளது. எம்.சி.எக்ஸ்.,ன் புதிய ஒப்பந்தம் அதிக பருத்தியை வர்த்தகத்துக்கு கொண்டு வரும். இது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

    ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களும், எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தியின் எதிர்கால வர்த்தகத்தில் பங்கு பெறுவது அவசியம். இதுதொடர்பாக ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு பயிலரங்கு நடக்கிறது.

    இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

    சர்வதேச பருத்தி ஆலோசனை குழு அறிவிப்பின்படி சர்வதேச அளவில் பருத்தி நுகர்வின் அளவு 23 மில்லியன் டன்களாகும். அமெரிக்கா வேளாண் துறையின் அறிக்கையின்படி 2023-24 ம் ஆண்டில் உலக பருத்தி உற்பத்தி 24.9 மில்லியன் டன்களாக இருக்குமெனவும், இதில் சீனாவும்- இந்தியாவும் இணைந்து உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக இந்தியாவில் இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும். இந்தியா பருத்தியை வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

    இந்திய பருத்தி கழகத்தின் தகவல்படி இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020 -21ம் ஆண்டில் 352 லட்சம் பொதிகளிலிருந்து, 2021-22 ஆண்டு பருத்தி பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. தமிழகத்தில் பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகைபட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது.

    தற்போது ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிப்பட்டம் விதைப்பு துவங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் 1.48 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரப்பில் 7. 5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகமாகும்.

    விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக வேளாண் பல்கலை விலை முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் படி, பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு 7000 - 7500 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை படி விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில் உற்பத்தியாகும்

    பருத்தி நூலிழை ஆடைகளுக்கு அதிகரிக்கும் மவுசு 

    • 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும்.

    பெருமாநல்லூர் :

    தொழில் வளம் பெருக, பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது. இதை நோக்கமாக கொண்டே மாநில அரசு அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஒரு ெஹக்டர் அதாவது 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு, பழம் தரம் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும்.

    அந்த பூஞ்சோலைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.பின் அதை பராமரிக்கும் பொறுப்பு அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும். திருப்பூர் வனச்சரகத்தில் மரகத பூஞ்சோலை திட்டத்தில் தகுதியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன்தான் தேர்வு செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.

    திருப்பூர் :

    பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் திருப்பூரில் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது:- மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.பயிற்சியானது கடந்த டிசம்பா் மாதம் முதல் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாா்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. ஆகவே, பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த ஏதுவாக வரும் வாரத்தில் அந்தந்த பள்ளி அளவில் திருப்புதல் தோ்வுகள் தொடங்குகின்றன.மேலும் பிப்ரவரி மாதம் திருப்புதல் தோ்வும், மாா்ச் 1 ந் தேதி செய்முறை தோ்வும் நடைபெற உள்ளது.எனவே பிளஸ் 2 மாணவா்களுக்கு அளிக்கப்படும் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது என்றாா்.அதேவேளையில் இந்தப் பயிற்சியானது தோ்வு முடிந்த மறுநாளில் இருந்து மீண்டும் தொடங்கும் என்றாா்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகள் ஆகும்.

    உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முன்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா்.

    • புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
    • கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
    • பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.

    இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
    • திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.  எனவே திருப்பூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் 1, 13, 14 ஆகிய வார்டுகள், 3-வது மண்டலத்தில் 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4-வது மண்டலத்தில் 52, 55 ஆகிய வார்டுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும்.

    திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

    • நிலுவையில் உள்ள 11072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ நடராஜன் வருகிற சனிக்கிழமை 12 ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11072

    விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  

    ×