search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road works"

    • நரிக்குடி ஒன்றிய சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
    • விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் தேளி-மானாமதுரை எல்லை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலையானது மிகவும் சேத மடைந்து மோசமான நிலை யில் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் தேளி, தர்மம், கொட்டகாட்சியேந் தல், பூவாக்கன்னி, கனைய மறித்தான் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளி லிருந்து மானாமதுரை வரை சென்று பின்னர் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த சாலையைத்தான் பிரதான மாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளிலிருந்து கல்லூரி, பள்ளிக்கூடம், கட்டிட வேலைக்கு செல் வோர் என பல்வேறு தரப்பி னரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையானது நரிக்குடி யூனியன் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தேளி-மானாமதுரை எல்லை வரையிலான சாலை போடும் பணிக்காக ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டு ஆறு மாத காலமாகியும் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத் திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மோசமான இந்த சாலை யால் கார், இருசக்கர வாக னம் போன்ற வாகனங் கள் அடிக்கடி பழுதாகி நிற்ப தோடு பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொது மக்களும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறித்த நேரத் திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    விருதுநகர்-சிவகங்கை மாவட்ட எல்லைக்கு இருபுற மும் உள்ள சாலைப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட் டிற்கு வந்த நிலையில் ஒன்றிய நிதியிலிருந்து சாலைப்பணிக்காக தேவை யான நிதி ஒதுக்கப்பட்டும் நரிக்குடி யூனியன் கட்டுப் பாட்டிலுள்ள தேளி-மானா மதுரை எல்லை வரையி லான ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலைப்பணிகள் மட்டும் கிடப்பிலேயே போடப்பட் டுள்ளதால் கடல் தீவு போல காட்சியளிப்பதாகவும் அப் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.

    சமீப காலமாக நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து நரிக்குடி யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள் ளாதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக வும் பொதுமக்கள் தெரி வித்தனர்.

    ஆகவே தேளி-மானா மதுரை எல்லையில் நரிக் குடி யூனியனிற்கு உட்பட்ட சாலைப்பணியை உடனடி யாக நிறைவேற்றி விரைவில் பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது
    • அசுர வேகத்தில் செல்லும் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு , காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தென்காசி புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கார்களை நிறுத்துவதற்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் கட்ட வேண்டும். பாவூர்சத்திரம் ஸ்டேட் வங்கி அருகே தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும், நகர் பகுதிகளில், அசுர வேகத்தில் செல்லும் அரசு பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் - ஆவுடையானூர் மற்றும் நாட்டார்பட்டி - பூவனூர் - திரவியநகர் சாலைகளை சீரமைக்க வேண்டும். தென்காசி நடு பல்கில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கழுகுமலை - சங்கரன்கோவில், சுரண்டை - பாவூர்சத்திரம் சாலையில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே பன்னடுக்கு கார் நிறுத்தும் வசதி குறித்து பரிசீலிப்பதாகவும், தென்காசி நகர் பகுதிக்குள் ஏற்படும் வாகன நெருக்கடியை குறைக்க புறவழிச் சாலை பணிகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகளும் உறுதி அளித்தனர். அப்போது பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும், ஆலங்குளம்- தென்காசி இடைய 4 வழிச்சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை விஸ்தரிப்பு பணியின்போது ஏராளமான பனை மரங்கள் இடையூறாக இருந்தது.
    • பனை மரத்தை மாற்று இடத்தில் நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரத்தில் இருந்து கேசவனேரி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை ஓரங்களில் விஸ்தரிப்பு பணியின்போது இடையூறாக ஏராளமான பனை மரங்கள் இருந்தது.

    இதனை பிடுங்கி அப்புறப்ப டுத்தாமல் ஒப்பந்தக்காரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பனைமரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நட்டனர். ஆங்காங்கே பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ரோடு போடுவதற்கு இடையூறுகளாக உள்ள பனை மரத்தை அழிக்காமல் மாற்று இடத்தில் பிடுங்கி நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    இந்த நிகழ்வில் கிரீன் கேர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையது, வள்ளியூர் உதவி பொறியாளர் முத்து முருகன், ராதாபுரம் உதவி கோட்ட பொறியாளர் சேகர் மற்றும் ஏர்வாடி அறம் செய் பசுமை இயக்கம் சேக் முகமது, வள்ளியூர் பசுமை கரங்கள் சித்திரவேல், பணகுடி மூக்க மாணிக்கம், ரோஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    • எம். ஜி.ஆர். நகர், கிறிஸ்டியாநகரம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது
    • சாலை பணிகளை உடன்குடி பேருராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் உடன்குடி பேரூராட்சி 1-வது வார்டு எம். ஜி.ஆர். நகரில் ரூ. 25.60 லட்சம் மதிப்பிலும், உடன்குடி பேருராட்சி 10- வது வார்டு கிறிஸ்டியாநகரம் தெற்கு தெருவில் ரூ. 27 லட்சம் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உடன்குடி பேருராட்சி தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் உடன்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி பிரபா, இளநிலை பொறியாளர் விஜயகுமார், உடன்குடி பேரூ ராட்சி 10-வது வார்டு கவுன்சிலரும், பேருராட்சி நிலை க்குழு உறுப்பினருமான ஜான்பாஸ்கர், 1-வது வார்டு கவுன்சிலர் சபீனா காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
    • அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமம் உள்ளது. இங்கிருந்து வளநாடு, செங்கப்படை வழியாக முதுகுளத்தூர் மற்றும் சத்திரக்குடி செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்ட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப் பட்டது.

    இதை தொடர்ந்து மண் சாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டப்பட்டு சாலையின் இரு புறங்க ளிலும் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட் டுள்ளன. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கி டப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியடைந் துள்ளனர்.

    சாலையில் ஜல்லிக் கற்கள் குவியலாக கிடப்ப தால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வளநாட்டில் இருந்து செங்கப்படை வழியாக புஷ்பவனம் கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்ற னர். அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை பெய்தால் சாலை சேறு, சகதியாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் வேதனை தெரி விக்கின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாகவும், இந்த சாலை பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால் புஷ்பவனம் கிரா மத்திற்கு செல்லும் அரசு பஸ் செங்கப்படை கிராமத்தோடு திரும்பி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து புஷ்பவனம் கிராமம் வரை அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார்.

     ஊட்டி,

    கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதனை ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார். பின்னர் ஸ்ரீமதுரை அடுத்த கொறவயல் பழங்குடியினர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின்கீழ் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கே. கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது
    • வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி சென்று வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் குந்தா ரோட்டில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே ரோட்டில் ஆங்காங்கே குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு உள்ளது.

    இது மழை காலம் என்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக, சாலை முழுவதும் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    எனவே அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊட்டி மஞ்சூர் குந்தா பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக .,செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

    இதன்படி பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியில், வேலம்பாளையம் முதல் வலையபாளையம் வரை சாலை விரிவாக்க பணி, கரைப்புதூர் ஆதிதிராவிடர் காலனி முதல் அறிவொளி நகர் வரை சாலை பலப்படுத்துதல், மாணிக்காபுரம் முதல் அம்மாபாளையம் பிரிவு வரை சாலை விரிவாக்கம் செய்தல், செட்டிபாளையம் ரோடு மின் நகர் பகுதியில் சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் புதூர் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து பொள்ளாச்சி ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணி, நாசுவம்பாளையம் முதல் பணிக்கம்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, காமநாயக்கன்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்தல் பணி, உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இதே போல பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டகவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பி. ஏ.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், நந்தினி சண்முகசுந்தரம், புனிதா சரவணன்,ரோஜாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு பிரசாந்த், ஆர்.ஆர்.ரவி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக .,நிர்வாகிகள் சாமிநாதன், குமார் ,அன்பரசன், துரைமுருகன், ஆட்டோ குமார், ராஜேஸ்வரன், பாலகுமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், துரைசாமி, சின்னப்பன், ரமேஷ், கோவிந்தராஜ், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, கனகராஜ், சிவாச்சலம், மலைப்பாளையம் சண்முகம், கோபி என்ற கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது.

    தென்காசி:

    வீ.கே. புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல் முயற்சியியால் ரூ. 48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கருவந்தா முதல் சோலைசேரி வரையிலான இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது. இதில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல், துணை தலைவர் மங்களம், ஊராட்சி செயலர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் பேச்சியம்மாள் மாரிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
    • 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    ×