search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரம்
    X

    சாலையை செப்பனிடும் பணிகளை தனுஷ்குமார் எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். அருகில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ராஜா மற்றும் பலர் உள்ளனர். 

    ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரம்

    • ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதனை எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி னார்கள்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், குறிப்பிட்ட தேதி க்குள் செப்பனிடும் பணியை முடிக்க அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் புதியதாக தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி அலுவ லகத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்று விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்படும். இப்பணி மேலும் விரைவுப்படுத்த அடுத்த வாரத்தில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மண்டல அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திட்டப்பணியின் பொறி யாளர் ராஜாமணி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×