search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.
    • பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும்.
    • இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் சார்பில் குமரன் கல்லூரியில் நாளை 4-ந்தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9மணி முதல் மாலை, 3:30 மணி வரை நடக்கும் முகாமில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி., மற்றும் பிற துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள, 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளங்கலை படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் மட்டும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

    முகாமில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளுக்காக, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி பஸ் இலவசமாக இயக்கப்பட உள்ளது.மேலும், விவரங்களுக்கு கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் 9942878094, 9790201617 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கல்லூரி முதல்வர் வசந்தி தெரிவித்தார்.

    • பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும்.
    • விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தகுதியான வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோவை மாற்றவும், முகாமில் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுருக்கமுறை திருத்த பணி நடக்க உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 1.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன.வரைவு பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும். இ

    ந்தாண்டு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வாக்காளர்கள் தற்போதும் விண்ணப்பிக்கலாம்.தாலுகா அலுவலகங்களில் தேவையான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்–மங்காளிபாளையம், அர்த்தநாரிப்பாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

    சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோடடம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.

    முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர்,வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம், வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார் டேம், பஞ்சப்பட்டி, சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், கள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.
    • கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    நீண்ட தூரம் பயணிக்க கூடிய அகல்யாநகரி, ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், பயணிகள் பாதுகாப்பு கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி , நிஜாமுதீனுக்கு ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (எண்:12643) வாராந்திர சிறப்பு ெரயிலாக இயக்கப்படுகிறது.கொச்சுவேலி ெரயிலில் வருகிற செப்டம்பர் 9ம் தேதி முதலும், நிஜாமுதீன் ெரயிலில் செப்டம்பர் 5-ந்தேதி முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இது குறித்து ெரயில்வே பொறியியல் பிரிவினர் கூறியதாவது:-

    அகல்யா நகரி, ஸ்வர்ண ஜெயந்தி ெரயில்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ெரயில்களின் பட்டியலில் உள்ளதால் பாதுகாப்பு, பயணிகள் சவுகரியம் கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்துவதால் அதிவேகத்தில் ெரயில்கள் பயணிக்கும் போதும் அதிர்வுகள் பெரிய அளவில் உணரப்படாது. கூடுதல் இடவசதி, பயோடாய்லெட் வசதி கொண்ட இப்பெட்டிகள் விபத்தின் போது எளிதில் கவிழாத வகையில் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    கோவை- மங்களூர் இடையே இயக்கப்படும் ெரயில், பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி கோவை - மங்களூர் (22610) ெரயில், காலை 6 மணிக்கு புறப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.

    அதே போல், கோவை - மங்களூர் (16323) ெரயில், கோவையிலிருந்து காலை 7:50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 18-ந் தேதி சர்வாத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    அரக்கோணம்- காட்பாடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ெரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ெரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ெரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

    கோவை சந்திப்பு - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12680), கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதே போன்று சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12679) காட்பாடியில் இருந்து தான், கோவை புறப்படும்.இந்த மாற்றம் நாளை 9 மற்றும் 10 -ந்தேதிகளில் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா்.
    • 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    திருப்பூா் :

    திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பொறுப்பு க.செந்தில்குமரன் தலைமையில் வருவாய்த் துறையினா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா ளா்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    மேலும், குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகளின் உரிமையா ளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

     திருப்பூர் :

    கோடை கால விடுமுறையில் பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம்-சென்னை இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் விடப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு செல்கிறது. 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 4.12 மணிக்கும், திருப்பூருக்கு 5.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 5.50 மணிக்கும், சேலத்துக்கு 6.55 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் சென்னை எழும்பூரில் இருந்து 4-ந் தேதி மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். ஜூன் மாதம் 29-ந்தேதி வரை 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேலத்துக்கு 7.22 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.20 மணிக்கும், திருப்பூருக்கு 9.15 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்றடையும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    • புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் 'தமிழ்க் கனவு' நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோடு புனித ஜோசப் மகளிர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பேசுகை யில், மாணவ, மாணவிகள், பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில், இலக்கியம், பாரம்பரியம், கலை, அறிவியல்போன்வற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி தொடர்பான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் மேலாக சமூக நீதி, சமத்துவ பண்பு களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    கலெக்டர் வினீத் பேசுகை யில்,மாணவ ர்களின் எதிர்கா லம் சிறக்க, அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க ப்படுகின்றன. கலாசாரம், பண்பாடு குறித்து மாண வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.பி., திருச்சி சிவா, படிப்போம் நிறைய என்ற தலைப்பில் பேசியதாவது:- இன்றைய சூழலில் இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடி கிறது. இதனால், புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது. குறிப்பா க,நூலகங்களுக்கு சென்று படிப்பது வெகுவாக குறைந்து விட்டது.நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது என்பது, அங்கு, ஆயிரக்கணக்கான அறி ஞர்கள் அமர்ந்திருப்பதாக அர்த்தம். படிக்க, படிக்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். பாடத்தி ட்டத்தோடு நின்றுவிடாமல், அதைத்தா ண்டி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டா லின் குணசேகரன், பேசி னார். முன்னதாக, போதை தவிர்ப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    • மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபான க்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூ டங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூ டங்கள் ஆகியவை 4-ந் தேதி அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் தொடர்பு டையவர்கள் மீது உரிய சட்டப்பிரி வுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து ள்ளார்.

    • கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தற்போது 7 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×