search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடை"

    • எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
    • மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

    இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

    இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர்.
    • மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பள்ளி, குடியிருப்பு அருகே மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் கிரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்து திருஷ்டி பூசணிக் காயை சுற்றி உடைத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மதுக் கடைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது. அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.

    இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

    அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன.
    • வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும்.

    புதுச்சேரி:

    புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.

    புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையை கடந்த காலங்களில் இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்து கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    • கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
    • தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் கேட்டு உள்ளார். கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

    இதனால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் ஒரு பெட்ரோல் கேனுடன் மீண்டும் மதுபானக் கடைக்கு வந்தார். கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கணினி உள்பட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
    • அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

    அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிப்புக்கு 4 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது.

    அதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் செய்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மதுபான கடை திறக்க கலால் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, 3 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உரிமம் வழங்குவது என மாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகள் திறக்கலாம் என உத்தரவு உள்ளது. இதை மனதில் வைத்து, 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

    இனிமேல் 3 ஆயிரம் மக்கள் தொகை என கொண்டு வந்தால், பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக கடைகள் திறக்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    • தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது.
    • உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சிறிது காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து வருவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரிக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. பெண்கள் பகலில் கூட தனியாக நடமாட முடியாத நிலை. வழிப்பறி, பாலியல் தொந்திரவு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மூல காரணம் மதுவாகத்தான் இருக்கிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதன் மூலம் வருமானத்தை மட்டுமே பார்கிறார்களே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்கவில்லை. தமிழக அரசு வீண் விவாதங்களிலும், விளம்பரம் தேடுவதிலுமே கவனம் செலுத்துகிறது. தமிழகமும், மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அரசு மதுக்கடைகளை மூடவேண்டும். உழைக்கும் மக்களின் வருமானம் முழவதும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகம் தலைநிமிரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் .

    இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். நல்ல எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.

    ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் முகம் சுழிக்கின்றனர்.
    • மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    அபிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகிலேயே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என தொடர்ச் சியாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அகத்தாரிருப்பு, அச்சங்குளம், பள்ளபச்சேரி தீர்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் அபிராமம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் அபிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையில் குடித்து விட்டு தள்ளாடியபடி சுற்றி திரிகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது முகம் சுழித்தபடி உள்ளனர்.

    மேலும் அவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்களை தாக்கி தகராறு செய்கின்றனர். மேலும் போதையில் இருக்கும் ஆசாமிகளை கண்டிக்கவும் பலர் தயங்குகின்றனர். பலர் போதை தலைக்கேறி அரை குறை ஆடையுடன் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் முகம் சுழித்தபடி நிற்கின்றனர். இந்த நிலையில் போதையில் பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் தொல்லை கொடுத்து வரும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஸ் நிறுத்த பகுதியில் போதை ஆசாமிகள் திரியாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×