தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 1-ந் தேதி மதுக்கடைகள் மூடல்

மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வருகிற 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விடுமுறை நாளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com