search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    • கல்குவாரி ஏலத்தில் மோதல் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
    • மற்றொரு அதிகாரி நீண்டநாள் விடுப்பு எடுத்து சென்றார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 குல்குவாரிகள் ஏலம் விடுவதற்கான டெண்டர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது டெண்டர் கோரி விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க.வினரையும், அரசுத்துறை அதிகாரிகளையும், காவல்துறையினரும் தி.மு.க.வினர் தாக்கியதோடு, அலுவலக பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதமாக்கினர். இதனால் கல்குவாரி டெண்டரை ரத்து செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

    இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் (பொ) ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்ததன்பேரில் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குபதிந்து 13 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    கல்குவாரி டெண்டர் விசயத்தில் அரசு அலுவலர்கள் பா.ஜ.க.வினருக்கு ஆதராக செயல்பட்டனர் என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் திடீரென கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளள்ளனர். கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இனை இயக்குநர் சரவணன் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய தற்காவிக ஊழியர்களை தவிர அனைத்து அலுவலர்களும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய குமரிஅனந்தன் குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அவருக்கு பதிலாக அங்கு குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய நாராயணசாமி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும், துணை தாசில்தார் மணிமேகலை கலெக்டர் அலுவலச சம்பள பிரிவு துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக நில எடுப்பு பிரிவு துணை தாசில்தார் சீனிவாசன் பெரம்பலூருக்கும் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மோதல் சம்பவத்தின்போது தாக்கப்பட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன் மனஉளைச்சல் அடைந்து நீண்ட நாள் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூருக்கு உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சரவணன் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றிள்ளார்.

    பதவி உயர்வு பெற்று 7 மாவட்டங்களை உள்ளடக்கிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநராக திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சரவணணை கூடுதல் பொறுப்பாக பெரம்பலூருக்கு நியமித்து சென்னை கனிம வள துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சரவணன் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்தவர் என்பதும், முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
    • குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே சொத்த விளை ஒசரவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63). இவர் வடசேரியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து செந்திலுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செந்திலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவிலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் இன்று காலை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. தாத்தா செந்தில், வெள்ளை செந்திலை தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் சுற்றி தெரியும் ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு போலீசார் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றசெயலில் ஈடுபடும் எந்த ரவுடியும் தப்பிக்க முடியாது என்றார்.

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர்
    • பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    • உதவி ஆய்வாளரை திட்டிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பொறுப்பில் உள்ள உதவி ஆய்வாளர் பணி ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி இந்த காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலா (வயது 45) என்பவருக்கு இரவு ரோந்து பணியை ஒதுக்கீடு செய்து உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டார்.

    ஆனால் கலா தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல முடியாது என கூறி உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசரை கடும் சொற்களால் திட்டியுள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் பெண் காவலர் கலாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

    • சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.
    • கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் கோட்டம் நல்லூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி இது இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாத கணக்கீடு செய்யப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் சாணார்பாளையம் பகிர்மான பகுதிகளான காளிபாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபுரம்புதூர், எம்.ஜி.ஆர்.நகர், காங்கயம்பாளையம், சாணார்பாளையம் பகுதிகளில் மின் நுகர்வோர் இனி வரும் காலங்களில் ஜனவரி மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார்
    • அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த

    திருச்சி, 

    திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் குறித்தலை சர டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பி.ஸ்ரீதர், திருச்சி மாநகர நுண்ணறிவு பிரி வு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார்.

    • பாரபட்சமாக பணி ஒதுக்கீடு செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து திருவெறும்பூர் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்
    • திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அதிரடி நடவடிக்கை

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் எஸ்.பி.யாக வருண்குமார் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் மற்றும் போலீசார் தங்கள் குறைகளை தனது செல்போனில் தெரிவிக்கலாம். மேலும் குற்ற நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் தனது தனிப்பட்ட செல்போனுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் ரகசியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி.அலுவலகத்தில் பணியாற்றும் ஏட்டு பிலால் பல மாதங்களாகவே பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக எஸ்.பி.அருண்குமாருக்கு தகவல் வந்துள்ளது.இதனை தொடர்ந்து இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதனை விசாரித்த தனிப்படை போலீசார் அறிக்கையை அருண்குமாரிடம் கொடுத்தனர்.அறிக்கையின்படி ஏட்டு பிலாலை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.வருண்குமார் உத்தரவிட்டார். அறிக்கை கிடைத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை அறிந்து போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • காட்பாடி - பெரம்பூர் மார்கத்தில் அரக்கோணம் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
    • 23, 30ந் தேதி ஆகிய 2நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயங்கும்.

    திருப்பூர்:

    காட்பாடி - பெரம்பூர் மார்கத்தில் அரக்கோணம் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12680) வருகிற 23, 30ந் தேதி ஆகிய 2நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயங்கும்.

    காலை 6:20 மணிக்கு கோவையில் புறப்படும் ெரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூர், சாமல்பட்டி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் வழியாக பயணித்து காலை 11:35 மணிக்கு காட்பாடி சென்று சேரும். அரக்கோணம் பெரம்பூர், சென்னைக்கு செல்லாது.

    மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் காட்பாடியில் இருந்து மாலை 4:20மணிக்கு ெரயில் (எண்: 12679) புறப்படும். இரவு 10:15 மணிக்கு கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
    • கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவை,

    கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, கண்ணூர் செல்லும் ரெயில்களின் நேரம் வருகிற 18-ந் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு கோவை வந்தடைந்து இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும் திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவைக்கு மாலை 6.10 மணிக்கு வந்தடையும். இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

    இதேபோல, தினமும் இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-கோவை ரெயில் (எண் 06807) ஆகஸ்டு 18 முதல் பாலக்காட்டில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.

    கோவையில் இருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு கண்ணூர் சென்றடையும் கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பாம்பாட்டிப்பட்டி வாலிபரை கண்மூடிதனமாக தாக்கிய எஸ்.ஐ., காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
    • திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் அதிரடி நடவடிக்கை

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில்குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார்.பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில்குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்
    • புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் அதிரடி மாற்றம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல் ரகுமான். இவர் சவரியார் பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்க்கும் அவரது மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், மனைவிக்கு ஆதரவாக ஆஜரானார்.இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்குபதிவு செய்தனர் . ஆனால் ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும் எனவலியுறுத்தி வக்கீல்கள்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர் .இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவி ல்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது குற்றவாளி ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும், அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணிமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . விரைவில் ஆரோக்கியராஜ் கைது செய்யப்படுவார் என்றும், சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டை பணிமாற்றம் செய்யப்படுவார் என வக்கீல்களிடம் போலீசார் ெதரிவித்தனர் .அதன் பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
    • 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிப்பகுதியில் சாலையை மறைத்து கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது;-

    கருவலூர் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 1980 ஆம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.அது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அத்தொட்டி அகற்றப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அதே இடத்தில் 60 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 20 அடி பாதையை மறைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் பள்ளம் தோண்டி உள்ளனர்.பொதுமக்கள் இது குறித்து கேட்டால்முறையாக பதில் தருவதில்லை.

    எனவே அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மேல்நிலை தொட்டி கட்டுவதை மாற்றி அண்ணா நகர் தெற்கு பகுதியில் புதிதாக உள்ள காலி இடத்தில் இந்த மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×