search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி அசம்பு ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
    X

    சாலைகளை தடுப்பு வேலிகளால் அடைத்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வடசேரி அசம்பு ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

    • அப்டா மார்க்கெட் வழியாக பஸ்கள் இயக்கம்
    • ரூ.1.40 கோடி செலவில் சீரமைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது‌. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட சாலை கள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. அதை சீரமைக்க நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்பொழுது அசம்பு ரோடு பகுதியில் சாலை சீரமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று தொடங் கப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை கள் தோண்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதையடுத்து அசம்பு ரோட்டில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பு ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஒழுங்கினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கரசாலையில் சென்று புத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் புத்தேரியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் நாற்கரசாலை வழியாக வந்து அப்டா மார்க்கெட் ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரவு பகலாக இந்த பணியை முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×