search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் 6 மாதத்திற்குள் மாற்றப்படும்
    X

    வி.என். காலனியில் உள்ள பூங்காவில் மேயர் மகேஷ் ஆய்வு செய்த காட்சி.

    வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் 6 மாதத்திற்குள் மாற்றப்படும்

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×