search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Dream Show"

    • சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    • புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் 'தமிழ்க் கனவு' நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோடு புனித ஜோசப் மகளிர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பேசுகை யில், மாணவ, மாணவிகள், பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில், இலக்கியம், பாரம்பரியம், கலை, அறிவியல்போன்வற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி தொடர்பான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் மேலாக சமூக நீதி, சமத்துவ பண்பு களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    கலெக்டர் வினீத் பேசுகை யில்,மாணவ ர்களின் எதிர்கா லம் சிறக்க, அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க ப்படுகின்றன. கலாசாரம், பண்பாடு குறித்து மாண வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.பி., திருச்சி சிவா, படிப்போம் நிறைய என்ற தலைப்பில் பேசியதாவது:- இன்றைய சூழலில் இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடி கிறது. இதனால், புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது. குறிப்பா க,நூலகங்களுக்கு சென்று படிப்பது வெகுவாக குறைந்து விட்டது.நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது என்பது, அங்கு, ஆயிரக்கணக்கான அறி ஞர்கள் அமர்ந்திருப்பதாக அர்த்தம். படிக்க, படிக்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். பாடத்தி ட்டத்தோடு நின்றுவிடாமல், அதைத்தா ண்டி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டா லின் குணசேகரன், பேசி னார். முன்னதாக, போதை தவிர்ப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • குடியாத்தத்தில் தமிழக் கனவு நிகழ்ச்சி நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழக் கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அகமே அழகு என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, அரை நூற்றாண்டு ஆட்சியும் அசுரவேக வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஊடகவி யலாளர் செந்தில்வேல் ஆகியோர் உரையாற்றினார்.

    அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    தமிழை கட்டாயமாக நாம் வளர்க்க வேண்டும். தமிழ்மொழி என்பது வரலாற்று கணக்கிட்டு முறைப்படி பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்தது. தொல்காப்பியர் தமிழை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என வகைப்படுத்தினார்.

    3 ஆயிரம் ஆண்டுக ளுக்கும் முன்பு தமிழை இவ்வாறு வகைப்படுத்தி எழுதுவதற்கு ஒரு நல்ல சிந்தனை இருந்துள்ளது. நமது கனவு என்பது பழமையான, தொன்மை யான தமிழ் மொழியை எத்தனையோ ஆண்டுகளாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் நாம் இன்றைக்கு உள்ளோம். ஆகவே நாம் கனவு காண வேண்டும்.

    தமிழ் மொழியை நாம் கற்க வேண்டும்.தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. இக்காலகட்டத்தில் பேனா, கரும்பலகை, சாக்பீஸ், அழிப்பான் போன்றவை உள்ளது.ஆனால் அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதினார்கள்.

    அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது.நமக்கு பின்னால் வரும் தலைமுறையினர் இவற்றை படித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது.

    ஆகவே இந்த கணிப்பொறி காலத்தில் நமக்கும் கனவு வேண்டும். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்,மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    அதனைத்தொடர்ந்து, தற்போது 2-ம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணிக்கு தலைவாசல், பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் "சமத்துவம் தமிழென்று சங்கே முழங்கு" என்ற தலைப்பில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., "கவிதைப் பெண்கள்" என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பண்பாட்டின் பெருமைகளை அறிய வைக்கும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும், அதன் நாகரீகம் குறித்தும் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிக் கொண்டு வரும் வகையில் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்

    முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு திறமை மிக்க சொற்பொழிவாளர்களை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இங்கு நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும். இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட உள்ளது.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பண்பாட்டிற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில் அடிப்படையாகத் திகழும் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாகஎடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து பயன்பெறசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தமிழ் இணைய கல்விக்கழக ஆய்வு வளமையர் கே.டி.காந்திராஜன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சொற்பொழிவாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் சிவராஜா, ராம நாதன் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×