கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது - பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பேச்சு

பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு நடைபெற்றது.பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம்.
மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய காட்சி.
மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய காட்சி.
Published on

திருப்பூர் :

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க அணிகள் மாநாடு திருப்பூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:- பொற்காலத்தின் தொடக்கத்தில் நாம் உள்ளோம். கோவை, திருப்பூரில் பா.ஜனதா வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை அணி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com