என் மலர்
நீங்கள் தேடியது "Child laborers"
- 18 வயது நிறைவடைந்தபின் குழந்தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
- 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.
திருப்பூர்:
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித தொழிலிலும் அமர்த்துவது குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்ந்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதன்படி திருப்பூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளில் 2 குழந்தை தொழிலாளர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என விதிக்கப்பட்ட அபராத தொகை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மறுவாழ்வு கணக்கில் செலுத்தப்பட்டது.
குழந்தை தொழிலாளியாக மீட்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காக அரசின் பங்குத்தொகையாக ரூ.15 ஆயிரம், பெற்று குழந்தைகள் மறுவாழ்வு கணக்கில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரையில் 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டித்தொகை கிடைக்கும் வகையில் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு, குழந்தையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தபின் குழந்–தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்–கில் செலுத்தப்படும்.
அவ்வாறு 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீட்கப்பட்டு அந்த சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு அதற்கான ஆணையை கலெக்டர் வினீத் சிறுவனிடம் வழங்கினார். இதுபோல் மீட்கப்பட்ட மற்றொரு 18 வயது பூர்த்தியடைந்த சிறுவனுக்கு ரூ.47 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.
இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
- 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.
திருப்பூர் :
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
- அதிகாரிகள் திடீர் ஆய்வு
- ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது 1986 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் மேலும் நீதிமன்றத்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரையின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டன.
வளரிளம் தொழி லாளர்க ளையும் மீட்கப்பட்டன. இதில் மூன்று உரிமையா ளர்களின் மீதும் நீதிம ன்றத்தால் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க ப்பட்டு ள்ளதாக திருவண்ணா மலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்து ள்ளார்.