கோவையில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Published on

கோவை,

கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் பெரிய கடைவீதி செட்டி வீதியில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்கள், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களை மீட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், ஓட்டல் மேலாளர் முகமத் ஹரீஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com