search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ம.தி.மு.க."

    • ம.தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஜெ.கவுரி மகேஷ்சங்கர் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளத்தில் உள்ள நோட்புக் அரங்கில் இன்று ம.தி.மு.க. மதுரை மண்டல இளைஞர் அணி, மாணவர் அணி, பொறியா ளர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் மு.செந்தில திபன், துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தி.சுப்பையா, மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன் ஆகியோர் தலைமை தாங்கி நேர்காணல் நடத்தினர்.

    இதில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.முனியசாமி, மார்நாடு, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.பூப்பாண்டி, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஜெ.கவுரி மகேஷ்சங்கர் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு ம.தி.மு.க. இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் மகாலில் விருதுநகர், தென்காசி மண்டல ம.தி.மு.க. இணையதள நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். விருதுநகர், தென்காசி மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல்குமார் வரவேற்று பேசினார்.

    ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மணி, தென்காசி மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் பொன். ஆனந்தராஜ், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ் (தென்காசி), ராஜகுரு (தூத்துக்குடி), ராம்விக்னேஷ் (நெல்லை) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் இணையதள பொறுப்பாளர்கள் ஹமீது, அருண்சங்கர், ராகவன், முருகராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரியில் 2 இடங்களில் நடந்தது

    கன்னியாகுமரி :

    தமிழக கவர்னர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதற்காக ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு மற்றும் கோவளம் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் நேற்று மாலை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாலசு ப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சிறப்பு விரு ந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பிச்சுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார்.
    • தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு மாநில கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பபெறக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி, வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவ நல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தென்காசி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செய லாளர் சுதா பாலசுப்பிர மணியன், சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட ம.தி.மு.க. துணைச்செயலாளர் சக்தி கோமதி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் மாரிச்சாமி, ஒன்றிய இணைச்செயலாளர் மணி சேகர், வாசுதேவ நல்லூர் ம.தி.மு.க. செயலா ளர் பாசறை கணேசன், தி.மு.க. செயலாளர் பாலசுப்பிர மணியன், மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு முருகன், வி.சி.க. சுரேஷ், முஸ்லீம் லீக் செய்யது சாகுல் ஹமீது, த.மு.மு.க. ஜமால், ம.தி.மு.க. மெடிக்கல் கருப்பையா, மாரியப்பன், விழி மணி, கோமதிசங்கர், முருகன், சந்திரன், ஆனந்த முருகன், சம்சுதீன், காளிராஜ், ராமநாதபுரம் முருகன், ராயகிரி சங்கையா, ம.தி.மு.க. துணைச்செயலாளர் தர்மர், தி.மு.க. மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் செல்லத்துரை, கட்ட பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்று பேசினாார்.தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் பொன் ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, தென்காசி, விருதுநகர் இணையதள மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலெட்சுமி சுப்பையா, இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமது ஹக்கீம், பூக்கடை பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் எதிரே ம.தி.மு.க. சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார் பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என ஆர்.என்.ரவி கூறுவதாகவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார் எனக்கூறி ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. நகர செயலாளர் திவான் சக்கரவர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டார்.

    நெல்லை:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக கூறி அவரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக அகற்ற குடியரசு தலைவரை வலியுறுத்தி நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு இன்று நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், ஐ.யூ.எம்.எல். நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி, ம.தி.மு.க. நிர்வாகிகள் மணப்படை மணி, கல்லத்தியான், கோல்டன் கான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மேயர் சரவணன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மாலை அணிவித்தனர்.

    • மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
    • பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.

    உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கொடியேற்று விழாவிற்கு சுப்பாராஜ் தலைமை தாங்கினார்.
    • மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.

    விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகம்மது ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசி முருகன், நகர துணைச் செயலாளர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கசாமி, அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
    • பல்வேறு பொறுப்புகளுக்கு வேட்பு மனு

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல், சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா தலைமையில் தொடங்கியது. மாநில கொள்கை பரப்புச் செயலர் வந்தியத்தேவன் பங்கேற்று, மாவட்டக் கழகத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெற்றார்.

    இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி அரியலூர் மாவட்ட அவைத் தலைவராக ந.சகாதேவன், மாவட்டச் செயலாளராக க.ராமநா தன், பொருளாளராக வீர.புகழேந்தி, துணைச் செயலாளர்களாக க.கல்யாணகுமார், உஷாசெல்வம், கோ. பழனிவேல், சே.கலிஸ்துராஜ், தலைமை செயற்குழு உறுப்பினராக பெ.தங்கவேல் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களாக இ.இளவரசன், மோகன்தாஸ், சி.ஜெயபால், தங்கராசு, கொளஞ்சி(எ)சிவகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×