search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்மிளா"

    • சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
    • சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

    கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

    சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

    சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
    • ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.

    ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-

    கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.

    ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.

    இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன்.
    • மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. ஜெகன் மோகன் ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது.

    விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. கொலைகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.

    கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன். நியாயம் ஒரு பக்கம். அநியாயம் இன்னொரு பக்கம். ராஜசேகர ரெட்டியின் பிள்ளை ஒரு பக்கம்.


    விவேகானந்த ரெட்டியை கொன்ற கொலையாளிகள் இன்னொரு பக்கம். மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

    ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு கால ஆட்சியில் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டு இருந்தார். தேர்தலுக்காக இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார்.

    அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் நலன்களுக்காக பாடுபட இந்த சர்மிளாவை தேர்ந்தெடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
    • தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பூத்தலப்பட்டு தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. எம்.எஸ். பாபுவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியில் இருந்த எம்.எஸ். பாபு கடப்பாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
    • ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.

    சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.

    அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
    • பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.


    வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

    நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.

    இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

    இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் .

    திருப்பதி:

    ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். சர்மிளா நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்ற அவர் வாழ்ந்த கட்சியான தாய் வீடான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்.

    நாட்டின் மிகப்பெரிய மத சார்பற்ற கட்சி காங்கிரஸ். காங்கிரஸில் தனக்கு வழங்கப்படும் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைனாகுலர் சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை.
    • தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சர்மிளா விரும்பினார்.

    அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார்.

    தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் சர்மிளா விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவரது கட்சிக்கு 'பைனாகுலர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புகிறார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    • சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொகுதியான கஜ்வெல்லில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா ஆதரவு தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கநேற்று தனது இல்லத்தில் சர்மிளா புறப்பட்டார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தயார் நிலையில் இருந்த போலீசார் சர்மிளாவை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.அவர்களுக்கு ஞானமும், சன்மார்க்கமும் கிடைக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். போலீசார் அரசியல் சாசனத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சர்மிளாவை வீட்டு காவலில் வைத்தனர் இது குறித்து சர்மிளா கூறுகையில் :-

    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடக்கு முறையை பயன்படுத்துகிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது. மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பக் கூடாதா.

    என்னை குறி வைத்து வீட்டு காவலில் வைப்பது வெட்கக்கேடானது என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டிற்கு வெளியே இருந்த போலீசார் சர்மிளா மற்றும் அவரது தாயாரை தடுத்து நிறுத்தினர்.
    • போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சர்மிளாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா எனும் புதிய கட்சியை தொடங்கினார்.

    கட்சி தொடங்கியது முதலே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் தெலுங்கானா பொதுத் தேர்வானையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக சர்மிளா எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதையடுத்து தெலுங்கானா அரசு வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்றை அமைத்தது.

    நேற்று சர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சிறப்பு குழு அலுவலகத்திற்கு செல்ல தனது தாயார் விஜயலட்சுமியுடன் வெளியே வந்தார்.

    அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த போலீசார் சர்மிளா மற்றும் அவரது தாயாரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த சர்மிளா பெண் போலீஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கினார்.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சர்மிளாவை கைது செய்தனர். அவரை நாம் பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    சர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அஞ்சல் குடா ஜெயிலில் சர்மிளா அடைக்கப்பட்டார்.

    சர்மிளாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

    சர்மிளாவின் தாயார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சர்மிளா சென்றார்
    • சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சியின் (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா சென்றார்.

    வீட்டில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக ஏற முயன்ற சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    சர்மிளா போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    ×