சந்திரபாபு நாயுடு நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார்- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு

சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார்- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

திருப்பதி:

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-

கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.

சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.

சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com