search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கட்சி"

    • இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி கலந்து கொண்டார். இதில் கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ், கிருஷ்ணகுமார், ருத்ரமூர்த்தி, சுந்தரி முருகேசன், சாகுல் அமீது, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார்.

    கூடலூர்,

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேரம்பாடி மற்றும் பாட்டவயல் பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கூடலூரை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார். இதேபோல் சேரம்பாடியில் தொடங்கி பந்தலூர் வழியாக வந்த பாதயாத்திரையை நிர்வாகி குஞ்சாபி தொடங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் காந்தி திடலை காங்கிரஸ் கட்சியினர் வந்தடைந்தனர். நிறைவு நிகழ்ச்சிக்கு கே.பி.முகமது மற்றும் நகர தலைவர் சபி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு நெல்லியாளம் நகர தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • உணவுப் பொருட்களான ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன்,மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார்.இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார், முருகதாஸ் ,செந்தில்குமார்,சுந்தரிமுருகேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மறியல்.
    • ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மேலும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
    • ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி மத்திய அரசைக்கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
    • குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற நட்பாசையுடன் பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மக்கள் மத்தியில் மதத்தை வைத்து மறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட கட்சியால் எப்படி நாட்டில் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அங்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    பாஜகவின் மோசமான ஆட்சியினால் இன்றைக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்றுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது.கேஸ் விலை எங்கோ சென்று விட்டது.

    அதை முதலில் குறைத்து பெண்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டி விட்டது அதை சரி செய்யுங்கள்.

    மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் அவதூறாக பேசினால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம்.
    • போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அறப்போராட்டத்தில், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார்,சத்தியமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில்,மத்திய அரசை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து பல்லடம் நகர,வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில்,தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார் வரவேற்றார். பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் செயல் தலைவர் மணிராஜ், ருத்ரமூர்த்தி,செந்தில்குமார்,சுந்தரி முருகேசன், ராமச்சந்திரன்,ஜேம்ஸ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி நகர காங்கிரஸ் சார்பாக, நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பழிவாங்கும் உள்நோக்கத்தோடு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடுவதையும், அமைதியாக போராடிய காங்கிரஸ் தலைவர்களை தாக்கிய மத்திய அரசை கண்டித்தும் சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் உலகநாதன், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் நாட்டாமை மாணிக்கம், சதானந்தன், மணி, செயலாளர்கள் செந்தில்குமார், மாடசாமி, கணேசன், சின்னக்கண்ணன், வேளியார், மருதப்பன், ஐ.என்.டி.யு.சி. மாடசாமி, டெய்லர் ஆறுமுகம், குட்டி, நிர்வாக குழு சந்திரன், தர்மராஜ்,

    இளைஞர் காங்கிரஸ் மனோ, பாலாஜி மற்றும் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா தேர்தலை நடத்திக் கொடுத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    மங்கலம் :

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டார அமைப்பு தேர்தல் மங்கலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக (பி.ஆர்.ஓ) எம்.கே.முஸ்தபா கலந்து கொண்டு தேர்தலை நடத்திக் கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் (பி.சி.சி) பதவிக்கு ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் வே.முத்துராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு மங்கலத்தை சேர்ந்த சபாதுரை ,திருமலாகண்ணன், எபிசியண்ட் மணி, நடராஜ் ,அப்துல்அஜீஸ்,யாசுதீன்,செந்தில்,வேலுச்சாமி, அலாவுதீன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நவமணி கரிச்சியப்பன் கலந்து கொண்டார்.

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.
    • வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, காங்கயம், அன்னூர், சென்னிமலை ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள ஐஎன்டியுசி. அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர்.கோபி தலைமையில் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும்,பாலக்காடு முன்னாள் சேர்மனுமான.பி.வி.ராஜேஷ்,வட்டார தேர்தல் அதிகாரிகள் சுப்பிரமணியம்,தீபக் ஆகியோரிடம் தொண்டர்கள் வழங்கினர்.

    மேலும் இதே போன்று வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம்,அவிநாசி,காங்கயம்,அன்னூர்,சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    ×