search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறப்போராட்டம்"

    • மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திர சூடேஸ்வர சாமி கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் குழப்பம் விளைவிக்கவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்துடனும், சில அரசியல் சக்திகள், "அமைப்பு " என்ற பெயரில், இயக்கமே இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரால் குழப்பம் ஏற்படுத்தவும், அங்கு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கின்ற இடத்தில், நமது விதிமுறைகள் கலாச்சார முறைப்படி நடைபெறும் இடத்திற்கு சென்று, நாங்கள்தான் மந்திரம் ஓதுவோம், நாங்கள்தான் யாகம் செய்வோம் என்று தேவையில்லாத உரிமைகளை நிலைநாட்ட முயன்று குழப்பம் செய்துள்ளனர்.

    விழா நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சி நேரடியாக மோத முடியாமல், பின்வாசல் வழியாக இயக்கம் என்ற பெயரில், நாலைந்து பேரை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். எங்குமே நடந்திராத யாருமே கேள்விப்படாத கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட முயன்றதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். போலீசார், இதற்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகளை கண்டறிந்து ஒடுக்குவதை விட்டு, விழா ஏற்பாட்டாளர்களுடன் கலந்து பேசாமல் ,பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இது போன்ற கோரிக்கைகளை வைத்து, கடவுள் சன்னிதியில் அநியாயம் செய்ய வந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓசூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இந்த நிகழ்வை, நாங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இது போன்ற சம்பவங்கள், வேறு எந்த கோவில் விழாக்களிலும் நடக்கக்கூடாது என்பதை உணர்த்தவும்,, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்தும் வகையில், பா.ஜ.க. மாவட்ட தலைமை சார்பில் 1-ந்தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும். கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும், பா.ஜ.க.வினர் ஆன்மீக விழாக்கள் நடத்தக்கூடாது என்ற எண்ணத்திலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற செயல்கள் மூலம், தி.மு.க.வினர் எங்களை சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • காங்கிரஸ் அறப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை அருகே மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

    முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், காரைக்குடி நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி.

    மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ். ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செய லாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி. அருணா.

    மணச்சை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுகோள்.
    • பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

    சென்னை:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் நாளை (26.03.2023) ஞாயிறுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நாளை (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சத்தியாகிரக அறப்போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

    • சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.
    • தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், ம.தி.மு.க, கமுனியூஸ்டு சி.பி.எம், தி.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சதீஸ் (எ) சேட்டு மற்றும் மூர்த்தி (கிழக்கு) ஆகியோர் தலைமையில் சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மாது (வடக்கு) தனஞ்செயன் (தெற்கு ) ,விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் முனிராவ், ஊடக மற்றும் செய்தி பிரிவு மாநிலத் துணை செயலாளர் அம்பேத்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளஞ்சூரியன் (எ) லட்சுமணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மசூத் அஹமது, செல்வராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி செந்தில் உள்ளிட்ட தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம்.
    • போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அறப்போராட்டத்தில், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார்,சத்தியமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×