மத்தூர் பேருந்து நிலையத்தில் சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம்

சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்தூர் பேருந்து நிலையத்தில் சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம்
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், ம.தி.மு.க, கமுனியூஸ்டு சி.பி.எம், தி.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சதீஸ் (எ) சேட்டு மற்றும் மூர்த்தி (கிழக்கு) ஆகியோர் தலைமையில் சமூகமத நல்லிணக்க அற போராட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மாது (வடக்கு) தனஞ்செயன் (தெற்கு ) ,விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் முனிராவ், ஊடக மற்றும் செய்தி பிரிவு மாநிலத் துணை செயலாளர் அம்பேத்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளஞ்சூரியன் (எ) லட்சுமணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மசூத் அஹமது, செல்வராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி செந்தில் உள்ளிட்ட தோழமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com