search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road protest"

    • வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 85க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போடுவதால் அவர்களின் வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி இன்று உழவர் சந்தை அருகே வெளி ஆட்கள் கடை போட்டு உள்ளதை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு சாலையோர வியாபாரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் விவசாயிகள் காலையில் தங்களிடம் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர் .அதை நாங்கள் வாங்கி உழவர் சந்தை விவசாயிகள் போன பிறகு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விற்பனை செய்து வருகிறோம். இந்த நிலையில் எந்த விதத்திலும் சாலையோர வியாபாரிகளின் காய்கறி விற்பனையால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் தொன்று தொட்டு இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம்.

    மேலும் நகராட்சிக்கு சுங்க வரி செலுத்தி வருகிறோம் .இந்த நிலையில் எங்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தால் எங்களது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் எனக் கூறி தாராபுரம் _பொள்ளாச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் நடைபாதை கடை வியாபாரிகள் ஈடுபட்டனர் .அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.
    • சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நகர் பகுதியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில்புதுரோடு பேருந்துநிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு இருபுறமும் மருதமலை கார்டன், அம்மன் நகர், ஜி .என். நகர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் சாலையை கடக்க முடியாத வகையில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பேருந்தில் வந்து இறங்கும் பொதுமக்கள் சாலையைகடக்க முடியாமல்அவதி அடைவதாகவும் பெண்கள் முதியவர்களுக்கு கடும் இடையூறுஏற்படும் வகையில்தடுப்புகள் அமைந்துள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை நடுவே உள்ள மைய தடுப்புகளைஅகற்றி சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மையதடுப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
    • மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

    மங்கலம் :

    மோடி பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    இந்தநிலையில் மத்திய அரசு பொய்யான வழக்கு போட்டதை கண்டித்தும் மத்திய அரசு வழக்கை வாபஸ் பெறக்கோரியும் மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. மங்கலம் நால்ரோடு அருகே நடைபெற்ற கண்டன ஊர்வலம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சபாதுரை தலைமை தாங்கினார்.இதில் காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமலாகண்ணன், அப்துல்அஜீஸ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி, மகிளா காங்கிரஸ் மகளிர்அணி மாநில செயலாளர் நவமணி , முன்னாள் வட்டார துணைத்தலைவர் தங்கவேல்,காங்கிரஸ் அலாவுதீன், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அர்ஜூனன், ரபிதீன் ,எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காங்கேயம் :

    பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய தி.மு.க., பேச்சாளரை கைது செய்ய கோரி சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பா. ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கேயம் நகர, ஒன்றிய பா.ஜ.க.வினர் காங்கேயம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே நகரத் தலைவர் சிவபிரசாத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கலாநடராஜன் மற்றும் சித்ரா மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
    • ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி மத்திய அரசைக்கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து திட்ட எதிர்ப்பாளர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #ChennaiSalemExpressway #Farmers

    திருவண்ணாமலை:

    சென்னை - சேலம் இடையே 278 கிலோ மீட்டர் தூரம் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட 5 மாவட்டங்கள் வழியாக புதிதாக 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டினர்.

    இந்த 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இந்த 8 வழிச்சாலைக்கு நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்போவதாகவும், விவசாயிகள் தங்கள் கருத்துகளை 21 நாட்களில் தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோதி, நாராயணசாமி, அபிராமன், பாசறை பாபு, வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 8 வழிச் சாலையை அமைக்க முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்- அமைச்சர் 8 வழிச்சாலை விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்த சாலைக்கு 89 சதவீதம் மக்கள் ஆதரவாகவும், 11 சதவீதம் மக்கள் மட்டுமே எதிர்ப்பாகவும் உள்ளதாக அவர் கூறுகிறார். புள்ளி விவரங்கள் குறித்த தகவலை தமிழக முதல்- அமைச்சர் பேசும்போது கவனமாகவும், பொறுப்புடனும் தெரிவிக்க வேண்டும். 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நோக்கம் நிறைவேறாது. விவசாயிகளுக்கு துரோகம் செய்ய எந்த அரசு நினைத்தாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதன் பதில் எதிரொலிக்கும்’’ என்றனர்.

    அதனை தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நில எடுப்பு தனி வருவாய் அலுவலரிடம் ஆட்சேபனை மனு அளித்தனர். 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. #ChennaiSalemExpressway #Farmers

    ×