மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி மத்திய அரசைக்கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com