search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கட்சி"

    • ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக போராட்டத்தில், காங்கிரஸ் மாநில செயலாளர் சித்திக், பல்லடம் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் கணேசன், செயற்குழு புண்ணியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ்,நரேஷ் குமார்,சுந்தரி முருகேசன், வேலுச்சாமி,சாகுல் அமீது,முருகன்,காதர் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு.

    உடுமலை :

    பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.

    இதனை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் காங்கிரஸ் லோகநாதன், டி. கோவிந்தராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கனகராஜ், குப்புசாமி, வெங்கடேசன், முத்துக்குமார் ,வெற்றிவேல் குமார் ,பிரசாந்த் உட்பட 70 பேர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆன் லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுனர் ரவியை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா மற்றும் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் இ.பாரத் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜானிஜாவித் முன்னில வகித்தார்.

    மாவட்ட தலைவர் ச.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் முனி சாமி, சாந்தசீலன், மாவட்ட துணை தலைவர் வெங்கடே சன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நெடுமாறன்,பாரி வள்ளல் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ் நன்றி கூறினார்.

    • பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.
    • கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் 99 சதவீதம் பேர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், மரியாதை கிடைத்தால் போதும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோல்வியடைந்து, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.

    மக்களை அடைத்து வைத்து மது, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஜனநாயக படு கொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் வாக்குகள் இல்லை. திமுக, காங்கிரசை தூக்கிப்பிடித்து திரிகிறது.

    வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். எல்லாவற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒதுக்குகின்றனர். இங்குள்ள மக்கள் காட்டுக்கருவேல மரம் வெட்டி கரிமூட்டம் போட்டுத்தான் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழக த்தில் தி.மு.க. அரசால் நல்லதும் நடக்கவில்லை, கெட்டதும் நடக்கவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் குடி நீரில் மலக்கழிவுகளை கலந்தவர்கள் யார் என்று அரசுக்கு தெரிந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

    ஓட்டு வங்கி அரசிய லுக்காக தி.மு.க. அரசு இப்படி செயல்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி இந்திரா நகர் பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி மின் மயானம் அமைக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் த.ம.மு.க. சார்பில் பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சிவகிரி நகர காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சிவகிரி:

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி, மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து 7-ம் திருநாள் மண்டபம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஓ.பி.சி. தலைவர் திருஞானம், நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், நகர இலக்கிய அணித்தலைவர் அசோக், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் எம்.குமார், நாட்டாமை மாணிக்கம், எஸ்.வேலுச்சாமி, செயலாளர்கள் வெள்ளைச்சாமி, குட்டி டெய்லர், ஆறுமுகம், கணேசன், மாடசாமி, வெள்ளத்துரை, மணி ஆசாரி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு மாநிலத் தலைவர் அழகிரி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

    இதன்படி பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்களாக செந்தில்குமார், சுந்தரிமுருகேசன், அமராவதியப்பன், நகர பொதுச்செயலாளர்களாக கிருஷ்ணகுமார்,உத்திரமூர்த்தி, நகர செயலாளர்களாக முருகன்,கனகராஜ்,சாகுல்அமீது, ராமச்சந்திரன், சபீர்முகமது,பண்ணாரி, நகர பொருளாளராக சுரேஷ், நகர ஆலோசகர்களாக ஏ.பி.முத்துசாமி, சதாசிவம்,அர்ச்சுணன், ப.சக்திவேல்,எம்.மணிராஜ் மற்றும் 18வார்டு கமிட்டி தலைவர்கள்,நகர செயற்குழு உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்ட நிர்வாகிகளை எனது பரிந்துரையை ஏற்று மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். பல்லடத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பி.ஐ.வங்கி மற்றும் எல்.ஐ.சி சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர் கணேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, மணிராஜ், முருகன்,வேலுசாமி, நரேஷ், ராமசந்திரன், சாகுல், தமிழ்செல்வி,லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    காரைக்குடி

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண விழாவினை முன்னிட்டு காரைக்குடி நகரில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஜெயபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருணா, பாலா, சிவா, அழகேஷ், முத்து, மணி, புதுவயல் முகம்மது மீரா, கண்டனூர் குமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாச்சம்மை, விஜி, சூர்யா, பிரதீக்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி கலந்து கொண்டார். இதில் கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ், கிருஷ்ணகுமார், ருத்ரமூர்த்தி, சுந்தரி முருகேசன், சாகுல் அமீது, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார்.

    கூடலூர்,

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேரம்பாடி மற்றும் பாட்டவயல் பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கூடலூரை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார். இதேபோல் சேரம்பாடியில் தொடங்கி பந்தலூர் வழியாக வந்த பாதயாத்திரையை நிர்வாகி குஞ்சாபி தொடங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் காந்தி திடலை காங்கிரஸ் கட்சியினர் வந்தடைந்தனர். நிறைவு நிகழ்ச்சிக்கு கே.பி.முகமது மற்றும் நகர தலைவர் சபி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு நெல்லியாளம் நகர தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×