search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கட்சியினர்"

    • ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
    • காங்கிரசார் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை, உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஓசூரில் காங்கிரசார் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகிலும், பஸ் நிலையத்திலும் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவப்ப ரெட்டி, கீர்த்தி கணேஷ் மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார்.

    கூடலூர்,

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேரம்பாடி மற்றும் பாட்டவயல் பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கூடலூரை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார். இதேபோல் சேரம்பாடியில் தொடங்கி பந்தலூர் வழியாக வந்த பாதயாத்திரையை நிர்வாகி குஞ்சாபி தொடங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் காந்தி திடலை காங்கிரஸ் கட்சியினர் வந்தடைந்தனர். நிறைவு நிகழ்ச்சிக்கு கே.பி.முகமது மற்றும் நகர தலைவர் சபி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு நெல்லியாளம் நகர தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திலகர் தலைமையில், நிர்வாகிகள் ரமேஷ், ரவிக்குமார், சீத்தாராமன், ராமச்சந்திரன், மணி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×