search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிய ஜனதா கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்
    X

    பாரதிய ஜனதா கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்

    • காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
    • குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற நட்பாசையுடன் பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மக்கள் மத்தியில் மதத்தை வைத்து மறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட கட்சியால் எப்படி நாட்டில் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அங்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    பாஜகவின் மோசமான ஆட்சியினால் இன்றைக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்றுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது.கேஸ் விலை எங்கோ சென்று விட்டது.

    அதை முதலில் குறைத்து பெண்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டி விட்டது அதை சரி செய்யுங்கள்.

    மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் அவதூறாக பேசினால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×