search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் -  போலீசாருடன் தள்ளுமுள்ளு -பரபரப்பு
    X

    மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி. 

    மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு -பரபரப்பு

    • விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மறியல்.
    • ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மேலும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×