search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை, கட்சிகள் பெற்ற தொகை ஆகியவை வெளியிடப்பட்டது.
    • எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதி நாங்கள் அறிய விரும்புகிறோம்- கோர்ட்

    தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் நன்கொடை கொடுக்கப்பட்ட நிறுவனங்கள், கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மட்டும் முதலில் கொடுத்தது. நாங்கள் கொடுக்க சொன்னது அனைத்து தரவுகளையும் என உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் (unique bond numbers), கொடுத்தவர் பெயர், அவர் எந்த கட்சிக்கு கொடுத்துள்ளார் என உள்ளிட்ட தகவல்களை கொடுக்கவும் வலியுறுத்தியது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரத்தின் சிறப்பு எண் உள்ளிட்ட எந்த தகவலும் மறைத்து வைக்கப்படவில்லை என்ற உறுதியை நாங்கள் பெற விரும்புகிறோம்.

    தனிப்பட்ட நன்கொடையாளர்கள், நிறுவனம் ஆகியவை மூலம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக வருகிற 21-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இன்றும் ஒரு உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் ஒரு சிறப்பு வாய்ந்த எண் இருப்பதாகவும், இந்த எண் மூலமாக எந்த கட்சிக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    தேர்தல் பத்திரத்தின் சிறப்பு நம்பரை வைத்து நன்கொடையாளர்கள் யாருக்கு பணம் வழங்கினார்கள் என்ற தகவலை முழுமையாக சேகரித்து அதை சரிபார்ப்பதற்காக எஸ்பிஐ ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், அதிமுக தேர்தல் பத்திரம் மூல ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. அதில், 4 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.

    அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்ற 2019- ம் ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதி அளித்தது தெரிய வந்துள்ளது.

    திமுக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடியும், சந்திரசேகர் ராவ்-ன் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ரூ.1,322 கோடியும் நிதி பெற்றுள்ளது

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக ரூ.656 கோடியும், அதிமுக ரூ.6.05 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது

    • 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள் தனி தனியாக இருந்தது.

    இதனையடுத்து, உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே, 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உரிய பதிலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. ஆதலால் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதனையொட்டி, கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே?

    தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்.

    தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய மிரட்டி பணம் பறித்தல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை எங்கே போனது.

    திரிணாமுல் காங்கிரஸ் 1600 கோடி ரூபாய், காங்கிரஸ் 1400 கோடி ரூபாய், பாரத் ராஷ்டிரிய சமிதி 1200 கோடி ரூபாய், பிஜேடி 775 கோடி ரூபாய், திமுக 649 கோடி ரூபாய் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரம் இல்லாமல் பணம் மூலம் நேரடியாக நன்கொடையாக வழங்கும்போது.

    காங்கிரஸ் கட்சியில் 100 ரூபாய் டெபாசிஸ்ட் செய்து, ஆயிரம் ரூபாயை அவர்களுடைய வீட்டில் வைத்திருந்திருந்தனர். இது நீண்ட காலமாக நீடித்தது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நன்கொடையாளர்கள் அளித்த தொகை எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தது.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

    தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத்தில் பதிவேற்ற நகல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    • ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
    • வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச் சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

    தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-16-ம் ஆண்டில் மொழிச் சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

    ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு பரிமாற்றம்.
    • பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கும் பணம் வந்துள்ளது. அது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கவும் உத்தரவிட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் எஸ்பிஐ காலஅவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உடனடியாக (மார்ச் 12-ந்தேதி) வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    அதன்படி நேற்று தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்னென்ன? என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில் "2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3,346 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். அதில் 1,609 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டது (பரிமாற்றம்).

    2019 ஏப்ரல் 12-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தமாக 18871 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். 20421 தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்க வழங்கப்பட்டது.

    மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (பணத்திற்குப் பதிலாக பரிமாற்றம்).

    தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிடிஎஃப் (PDF Files) பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டும் வழங்கப்பட்டுள்ளது.

    187 பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட பணம் சட்ட விதிமுறைப்படி பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சந்திரா பாண்டே என்ற தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
    • அருண் கோயல் கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். அவர் ஒரு நாளாக இருந்து தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பின் 14-ந்தேதி ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2023 நீதிமன்ற தீர்ப்பின்படி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மனுவை நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
    • ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்

    குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    • 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
    • தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) பகிர வேண்டும் என்றும், அவற்றை மார்ச் 13-ந்தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இதற்கிடையே 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி கடந்த 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அவர் வாதாடும்போது கூறியதாவது:-

    எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில் வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது.

    எனவே தகவல்களை கொடுக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். 55 செயல்முறையையும் நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் தேர்தல் பத்திர விவரங்கள் கொடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    ஹரீஷ் சால்வேயின் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-

    தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாட்கள் ஆகி விட்டது. இந்த 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    மிக எளிமையாக திரட்டக்கூடிய இந்த தகவல்களை தருவதற்கு அவகாசம் ஏன்? அதாவது 24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று உள்ளன.

    அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது. பாரத ஸ்டேட் வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மாற்றுமாறு இப்போது கேட்பது ஏன்?

    கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இந்த பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியை கேட்கவில்லை. நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறோம். தகவல்களை ஒருங்கிணைக்க கால அவகாசம் கேட்பது சரியல்ல.

    இவ்வாறு நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும், அறிவுறுத்தல்களையும் முன் வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்துள்ள தகவல்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் சமர்ப்பிக்க விட்டால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

    ×