search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கருப்பு பணம் திரும்பிவிடும் என பயப்படுகிறேன்: தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து குறித்து அமித் ஷா கருத்து
    X

    கருப்பு பணம் திரும்பிவிடும் என பயப்படுகிறேன்: தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து குறித்து அமித் ஷா கருத்து

    • மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
    • பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே?

    தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்திருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்.

    தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய மிரட்டி பணம் பறித்தல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    பா.ஜனதா சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. மொத்த பத்திரங்கள் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மீதமுள்ள 14 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை எங்கே போனது.

    திரிணாமுல் காங்கிரஸ் 1600 கோடி ரூபாய், காங்கிரஸ் 1400 கோடி ரூபாய், பாரத் ராஷ்டிரிய சமிதி 1200 கோடி ரூபாய், பிஜேடி 775 கோடி ரூபாய், திமுக 649 கோடி ரூபாய் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரம் இல்லாமல் பணம் மூலம் நேரடியாக நன்கொடையாக வழங்கும்போது.

    காங்கிரஸ் கட்சியில் 100 ரூபாய் டெபாசிஸ்ட் செய்து, ஆயிரம் ரூபாயை அவர்களுடைய வீட்டில் வைத்திருந்திருந்தனர். இது நீண்ட காலமாக நீடித்தது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×