search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு தடைகோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது
    X

    தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு தடைகோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது

    • சந்திரா பாண்டே என்ற தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
    • அருண் கோயல் கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். அவர் ஒரு நாளாக இருந்து தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பின் 14-ந்தேதி ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2023 நீதிமன்ற தீர்ப்பின்படி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மனுவை நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×