search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngster"

    • வாலிபர்களை முகமது சல்மான் சத்தம் போட்டு உள்ளார்.
    • முகமது சல்மான் கையில் வாலிபர்கள் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் பங்களாப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சல்மான் (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த சிறுவர்களிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த முகமது சல்மான் அவர்களை சத்தம் போட்டு உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள். முகமது சல்மான் கையில் பிளேடால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மேலப்பாளையம் போலீசில் முகமது சல்மான் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாலிபரை வெட்டி விட்டு சென்றது கணேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா என்ற சுரேஷ் (24), ஆசுரன் கீழத்தெருவை சேர்ந்த யூனுஸ் (22) என்பது தெரிய வந்தது.

    • து போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாரதி (வயது 34).ஜீவாநகர் உமாபாரத் லே அவுட் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இவருடைய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாரதி அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.அந்த அறை முழுவதும் மெகா சைஸ் குப்பை தொட்டி போல குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஜயா கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணாநகரைச் சேர்ந்த சேதுராமன் மனைவி விஜயா(வயது 53). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அருகே வந்த வாலிபர் விஜயா வைத்திருந்த சுருக்குப்பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விஜயா திருடன், திருடன், என சத்தம் போட அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆயிரம்ரூபாய் பணத்துடன் இருந்த சுருக்குப் பையை விஜயாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்தபோது அவர் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த திருமலைசாமி மகன் சுரேஷ்குமார்,24, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
    • மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் செல்வராஜ் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு மறைவான இடத்தில் வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.

    போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது எங்கு காய்ச்சியது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் இடுவாய்மலர் கார்டனை சேர்ந்தவர் கேசவன் (வயது 28) .இவர்கணியாம் பூண்டியில் மருந்துகடை, பணம் பரிவர்த்தனையும்நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு ரூ.8.53 லட்சம் பணத்துடன் தனது மைத்துனர் வெற்றிவேல் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரும் கீழே விழுந்தனர்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் கேசவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.இதுகுறித்து கேசவன் மங்கலம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த வழிப்பறி வழக்கில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரையும் கேரளாவை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழிப்பறி பணத்தில் வாங்கிய காரையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட ரிஜோன் பைல்ஸ் தேசாய் என்பவரை தேடி வந்தனர். இவருக்கு பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதுதெரிந்தது. மேலும் ரிஜோன் பைல்ஸ் தேசாய் வழிப்பறி பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவனை பிடிக்கும் விதமாக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் திருப்பூர் மாவட்ட போலீசாரால் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருந்த ரிஜோன் நேற்று இரவு இந்தியா திரும்பி உள்ளார் .அப்போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். இது தொடர்பான தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவனை திருப்பூர் அழைத்து வர தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இன்று அவரைதிருப்பூர் அழைத்து வந்துவிசாரிக்கும் போது, வேறுஎன்னென்ன குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பூமி பாலன் என்பவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார்.
    • தோட்டத்தில் கட்டியிருந்த ரூ.8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டம் குடிமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கொங்கல் நகரம் பகுதியில் வசித்து வரும் பூமி பாலன் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார் .கடந்த 9-ந்தேதி மேற்கண்ட விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர் தோட்டத்தில் கட்டியிருந்த ரூ .8000 மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை திருடி சென்று உள்ளார் . பூமி பாலன் மற்றும் அவரது நண்பர் பின்னால் துரத்திச் சென்று பெதப்பம்பட்டி செஞ்சேரிமலை ரோட்டில் கறிக்கடை அருகில் வைத்து ஆட்டுக்குட்டியுடன் மர்மநபரை பிடித்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது சந்துரு என்பது தெரியவந்தது.

    அவரை குடிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர் . போலீசார் சந்துருவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • விஜய் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று விஜய் தனது தாயாரிடம் குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (24). இவர் தனியார் நிறுனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல ஜோஸ்வா குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது தாயார் கண்டித்து குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறினார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சிங்கனூர் பிரிவில் 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீசார் சென்ற போது அங்கு கையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த கரைப்புதூர் ஊராட்சி கெம்பே நகர் ஹரிதாஸ் மகன் மாமலைவாசன்(26) மற்றும் பல்லடம் மாணிக்கபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(32) ஆகியோரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூர் கரையான் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20). கூலி தொழிலாளி.

    முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார். இதனை அவரது தந்தை, மகன் முருகேசுக்கு அறிவுரை கூறி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்.

    ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முருகேஷ் தவணைக்கு புதியதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரேக்ளா பந்தயத்தில் வாலிபர்கள் பங்கேற்று மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்தனர்.
    • வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம். இந்த பகுதியில் அதிகாலை ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது.

    இதில் நரசீபுரம், பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்று 20 மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்த னர்.

    ரேக்ளா பந்தயம் தேவராயபுரத்தில் தொடங்கி நரசீபுரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் சத்தம் கேட்டு மக்கள் எழுந்து பார்த்தனர்.

    அதிகாலை நேரத்தில் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

    கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் இரவு நேரங்களில் ரேக்ளா பந்தயம் போட்டி நடத்தி வருகின்றனர். இதனால் இரவில் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்சுக்கும் வழிவிடுவதில்லை. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் அதிக சத்தத்துடன் செல்வதால் அவதியாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மகள் நிஷாவுடன் (21) திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த சட்டப்படிப்பு படித்த ரகுமான்கான் (25) என்பவர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    இதையடுத்து ரகுமான்கானை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரகுமான்கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
    • டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் நால்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபாதர் தாஸ் மகன் சக்தி தாஸ்(28) என்பதும் வெள்ளகோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. கோடங்கிபாளையத்தில் வசிக்கும் தனது சித்தப்பா ஜெகபந்து தாஸை பார்க்க வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சித்தப்பா ஜெகபந்து தாஸ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×