search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது - மும்பை விமான நிலையத்தில் சிக்கினார்
    X

    கோப்புபடம்.

    வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது - மும்பை விமான நிலையத்தில் சிக்கினார்

    • பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் இடுவாய்மலர் கார்டனை சேர்ந்தவர் கேசவன் (வயது 28) .இவர்கணியாம் பூண்டியில் மருந்துகடை, பணம் பரிவர்த்தனையும்நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு ரூ.8.53 லட்சம் பணத்துடன் தனது மைத்துனர் வெற்றிவேல் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரும் கீழே விழுந்தனர்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் கேசவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.இதுகுறித்து கேசவன் மங்கலம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த வழிப்பறி வழக்கில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரையும் கேரளாவை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழிப்பறி பணத்தில் வாங்கிய காரையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட ரிஜோன் பைல்ஸ் தேசாய் என்பவரை தேடி வந்தனர். இவருக்கு பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதுதெரிந்தது. மேலும் ரிஜோன் பைல்ஸ் தேசாய் வழிப்பறி பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவனை பிடிக்கும் விதமாக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் திருப்பூர் மாவட்ட போலீசாரால் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருந்த ரிஜோன் நேற்று இரவு இந்தியா திரும்பி உள்ளார் .அப்போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். இது தொடர்பான தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவனை திருப்பூர் அழைத்து வர தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இன்று அவரைதிருப்பூர் அழைத்து வந்துவிசாரிக்கும் போது, வேறுஎன்னென்ன குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×