search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அரசு பெண் வக்கீலை வெட்டிய வாலிபர் கைது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் அரசு பெண் வக்கீலை வெட்டிய வாலிபர் கைது

    • உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மகள் நிஷாவுடன் (21) திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்தபோது திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த சட்டப்படிப்பு படித்த ரகுமான்கான் (25) என்பவர் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    இதையடுத்து ரகுமான்கானை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரகுமான்கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த ரகுமான்கானை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×