திருப்பூரில் கள்ளசாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது - 10லிட்டர் பறிமுதல்

பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

 திருப்பூர் :

திருப்பூர் பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் செல்வராஜ் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு மறைவான இடத்தில் வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.

போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது எங்கு காய்ச்சியது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com