பல்லடத்தில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சிங்கனூர் பிரிவில் 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீசார் சென்ற போது அங்கு கையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த கரைப்புதூர் ஊராட்சி கெம்பே நகர் ஹரிதாஸ் மகன் மாமலைவாசன்(26) மற்றும் பல்லடம் மாணிக்கபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(32) ஆகியோரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com