என் மலர்
நீங்கள் தேடியது "Extortion of money"
- 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
- வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கோபி என்ற யூசுப் (வயது 33). வியாபாரி. சம்பவத்தன்று இவர் செந்தமிழ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கோபி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- மகாலிங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.
- உங்களை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
திருச்சி,
திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது68). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அருகாமையில் வந்த ஒரு நபர், தான் ஒரு போலீஸ்காரர் என கூறினார். பின்னர் அவரிடம் சில கேள்விகளை கேட்டார். மகாலிங்கமும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அப்போது உன் மீது சந்தேகமாக உள்ளது . உன்னை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த துணிகர வழிபறி செயலில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் கிள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமுன் (வயது52) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). தனியார் வங்கி ஊழியர்.
இவர் சம்பவத்தன்று குறிச்சி எம்.எம்.பி நகரில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் வாலிபர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.700 பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் மற்றும் வெள்ளியை பறித்தது கோவை போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(24), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ்கான்(28) மற்றும் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த காஜா மொய்தீன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், ஷாரூக்கான் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகளும், காஜா மொய்தீன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பணம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம்அ டுத்த ஹரி ஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது28). இவர் நேற்று முன்தினம் அப்துல்லாபுரம் கிராமம் மின்வாரியம் அருகே எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்ஜிஆர் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் எடுத்து ஓடினார்.
எம்ஜிஆர் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் காஞ்சிபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் 19 என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து
தாமோதரனை கைது செய்தனர்.
- வேலூரில் மர்ம கும்பல் துணிகரம்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர்.அவர்கள் வேலூர் மாநகர பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜிகளில் தங்கி உள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது ரசூல் (வயது 34) என்பவர் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதால் லாட்ஜில் அறை எடுக்க முடிவு செய்தார்.
இதற்காக ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் லாட்ஜில் தங்கும் இடவசதி உள்ளது. எங்கள் ஆட்டோவில் வாருங்கள் என கூறியுள்ளனர். அதனை நம்பி முகமது ரசூல் அந்த ஆட்டோவில் ஏறினார்.
ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு ஆற்காடு ரோட்டில்வேகமாக வந்தனர். காகிதப்பட்டறை டாஸ்மாக் கடை அருகே வந்ததும் அதன் அருகில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோ நுழைந்தது. அங்கு வைத்து ஆட்டோவில் வந்த நபர்கள் முகமது ரசூலை சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயத்துடன் பணத்தை இழந்த முகமது ரசூல் அங்கு நின்று கொண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்தார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் போவதாக கூறிவிட்டு அவர் சென்றார்.
வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து பணம் பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தினமும் காலையில் ஆற்காடு ரோட்டில் மடக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
- தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார்.
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சங்கராபுரம் புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பழைய சோதனை சாவடி அருகே எண்ணை வாங்குவதற்காக மொபட்டை நிறுத்தினார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார். பின்னர் பொன்னுசாமியிடம் உங்களுடைய பணம் கீழே விழுந்து கிடப்பதாக கூறினார். அதனை அவர் எடுக்க முயன்ற போது அந்த மர்மநபர் பொன்னுசாமி ரூ.68 ஆயிரம் பணத்தை வைத்து இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபாரியை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- பயணிகள் விரட்டி பிடித்தனர்
- ரூ.1000 பறிமுதல்
ஜோலார்பேட்டை:
வாணிய ம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அப்துல் (வயது 38). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று கோவையி லிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அப்துல், டிபன் வியாபாரம் செய்து கொண் டிருந்தார். அப்போது வாலி பர் ஒருவர் அப்துல் பாக்கெட் டில் வைத்திருந்த 1,000 ரூபாயை திருடிக் கொண்டு ரெயிலிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் கூச்சல் போடவே பயணிகள் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து ரெயில்வே போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார். விசார ணையில் அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (31) என்பது தெரியவந்தது.
அவரை ரெயில்வே போலீ சார் கைது செய்து, அவரிடமி ருந்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
- ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபரை கைது செய்தனர்
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சகாயகுமார் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி சந்திப்பு ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் இவரிடம் பணத்தைப் பறித்து விட்டு சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பாரதி நகரை சேர்ந்த இப்ராஹிம்(வயது 39) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இப்ராஹிம் மீது உறையூர், கே.கே. நகர், கோட்டை, எடமலைப்பட்டி புதூர், கண்டோன்மெண்ட், அரியமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கீரனூர் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், பூட்டுதாக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் ஆகிய இருவரும் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.
சொரையூர்கூட் டுரோட்டில் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் (வயது 25) என்பவர் மணிகண்டன், மகேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து மணிகண்டன், மகேஷ் ஆகிய இருவரும் வாழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விமல் ராஜை நேற்று கைது செய்தனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- திருச்சி சுந்தர் நகரில் டாஸ்மாக் பார் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தனர்
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 48). இவர் திருச்சி சுந்தர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அங்கு நின்று கொண்டிருந்த ஜான் பாஷாவிடம் கத்தி முனையில் மிரட்டி இரண்டு பேர் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 40 ), மன்னார்புரம் காஜா நகரை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 20 )ஆகிய இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவில் நடந்து சென்ற ரவிச்சந்திரன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்ததாக திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சிவகுரு, உறையூரை சேர்ந்த அருண்குமார் ஆகிய இரண்டு வாலிபர்களை உறையூர் போலீசார் கைது செய்தனர்
- முதியவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
- எந்த பொருட்கள் வாங்குனாலும் விசாரித்து தான் வாங்குவோம்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 54). இவர் இருகூர் ரோட்டில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சிவலிங்கத்திடம் தாங்கள் போலீஸ்காரர்கள். நீங்கள் கடையில் திருட்டு பொருட்கள் வாங்கி வைப்பதாக புகார் வந்தது.
அதனால் விசாரிக்க வந்தேம் என்றனர். அதற்கு சிவலிங்கம் எங்கள் கடையில் திருட்டு பொருட்கள் வாங்குவது இல்லை. எந்த பொருட்கள் வாங்குனாலும் விசாரித்து தான் வாங்குவோம் என்றார்.
அதற்கு அந்த 2 பேரும் விசாரிக்க வந்ததற்காக ரூ.1000 வழங்க வேண்டும் என்றனர். போலீசார் என பயந்து போய் அவர் பணத்தை கொடுத்தார். அப்போது இரும்பு கடை சங்கத்தை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.
அவர் அந்த 2 பேரிடமும் விசாரித்தார். அதற்கு அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த 2 பேரையும் பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (57) மற்றும் அவரது நண்பர் கோவை அண்ணா நகரை சேர்ந்த காவலாளி பூபதி குமார் (49) என்பதும் இவர்கள் சிவலிங்கத்திடம் போலீசார் என மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி, பூபதி குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆன்லைனில் பான்கார்டை புதுப்பிக்கும்படி கூறி மோசடி
- வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
பெண் டாக்டர்
அதில் வங்கி நெட் பேங்கிங் முடக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு உடனடியாக பான்கார்டை புதுப்பிக்க வேண்டும். அதனை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று இணைப்பு (லிங்க்) ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
ரூ.1.35 லட்சம் பறிப்பு
இதனை உண்மை என்று நம்பிய டாக்டர் அந்த இணைப்பில் சென்று அவருடைய வங்கி தொடர்பான விவரங்களை பதிவிட்டுள்ளார்.
சிறிதுநேரத்தில் அந்த வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,35,087 எடுக்கப்பட்டது. அப்போதுதான் மர்மநபர்கள் போலியான இணைப்பு செல்போனுக்கு அனுப்பி பணத்தை அபேஸ் செய்தது டாக்டருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிந்து டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கை முதற்கட்டமாக முடக்கினார்.
பின்னர் தொடர் நடவடிக்கையாக அந்த கணக்கில் இருந்து ரூ.1,35,087-ஐ போலீசார் மீட்டனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் நேற்று டாக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில்:-
வங்கி விடுமுறை நாட்களை பயன்படுத்தி மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை அதிகளவு ஏமாற்றக்கூடும்.
எனவே சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.