என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
  X

  கோவையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

  கோவை,

  கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). தனியார் வங்கி ஊழியர்.

  இவர் சம்பவத்தன்று குறிச்சி எம்.எம்.பி நகரில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.

  இதனால் வாலிபர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.700 பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், பணம் மற்றும் வெள்ளியை பறித்தது கோவை போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(24), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ்கான்(28) மற்றும் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த காஜா மொய்தீன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், ஷாரூக்கான் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகளும், காஜா மொய்தீன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×