search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் டாக்டரிடம் ரூ.1.35 லட்சம் பறிப்பு
    X

    பெண் டாக்டரிடம் ரூ.1.35 லட்சம் பறிப்பு

    • ஆன்லைனில் பான்கார்டை புதுப்பிக்கும்படி கூறி மோசடி
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

    வேலூர்:

    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

    பெண் டாக்டர்

    அதில் வங்கி நெட் பேங்கிங் முடக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு உடனடியாக பான்கார்டை புதுப்பிக்க வேண்டும். அதனை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று இணைப்பு (லிங்க்) ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

    ரூ.1.35 லட்சம் பறிப்பு

    இதனை உண்மை என்று நம்பிய டாக்டர் அந்த இணைப்பில் சென்று அவருடைய வங்கி தொடர்பான விவரங்களை பதிவிட்டுள்ளார்.

    சிறிதுநேரத்தில் அந்த வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,35,087 எடுக்கப்பட்டது. அப்போதுதான் மர்மநபர்கள் போலியான இணைப்பு செல்போனுக்கு அனுப்பி பணத்தை அபேஸ் செய்தது டாக்டருக்கு தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிந்து டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கை முதற்கட்டமாக முடக்கினார்.

    பின்னர் தொடர் நடவடிக்கையாக அந்த கணக்கில் இருந்து ரூ.1,35,087-ஐ போலீசார் மீட்டனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் நேற்று டாக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில்:-

    வங்கி விடுமுறை நாட்களை பயன்படுத்தி மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை அதிகளவு ஏமாற்றக்கூடும்.

    எனவே சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×