search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காநல்லூர் அருகே போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு
    X

    சிங்காநல்லூர் அருகே போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு

    • முதியவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
    • எந்த பொருட்கள் வாங்குனாலும் விசாரித்து தான் வாங்குவோம்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 54). இவர் இருகூர் ரோட்டில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சிவலிங்கத்திடம் தாங்கள் போலீஸ்காரர்கள். நீங்கள் கடையில் திருட்டு பொருட்கள் வாங்கி வைப்பதாக புகார் வந்தது.

    அதனால் விசாரிக்க வந்தேம் என்றனர். அதற்கு சிவலிங்கம் எங்கள் கடையில் திருட்டு பொருட்கள் வாங்குவது இல்லை. எந்த பொருட்கள் வாங்குனாலும் விசாரித்து தான் வாங்குவோம் என்றார்.

    அதற்கு அந்த 2 பேரும் விசாரிக்க வந்ததற்காக ரூ.1000 வழங்க வேண்டும் என்றனர். போலீசார் என பயந்து போய் அவர் பணத்தை கொடுத்தார். அப்போது இரும்பு கடை சங்கத்தை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.

    அவர் அந்த 2 பேரிடமும் விசாரித்தார். அதற்கு அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த 2 பேரையும் பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (57) மற்றும் அவரது நண்பர் கோவை அண்ணா நகரை சேர்ந்த காவலாளி பூபதி குமார் (49) என்பதும் இவர்கள் சிவலிங்கத்திடம் போலீசார் என மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி, பூபதி குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×