வாகனம் மோதி வடமாநில வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் நால்ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பூபாதர் தாஸ் மகன் சக்தி தாஸ்(28) என்பதும் வெள்ளகோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. கோடங்கிபாளையத்தில் வசிக்கும் தனது சித்தப்பா ஜெகபந்து தாஸை பார்க்க வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சித்தப்பா ஜெகபந்து தாஸ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com