search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men"

    சுவாமிமலையில் கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்த 2400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பகுதி சரவண பொய்கை தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது27). இவர் சுவாமிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக இன்ஸபெக்டர் ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காசியய்யா, ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் இன்று காலை 8 மணியளவில் சரவண பொய்கை தெருவிற்கு சென்று வினோத் வீட்டருகில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

    அப்போது வினோத் மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியில் வரும்போது அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வீட்டில் பின்புறம் நடத்திய சோதனையில் ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள் கொண்ட 50 அட்டைபெட்டிகளை போலீசார் கைப்பற்றினர். அதில் 2400 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையை ஒட்டி சுவாமிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வினோத் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே இளம் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரளி மகள் ஈஸ்வரி (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் வீரம்மாள் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் உறவினரான பாண்டியன் மகன் முருகன் (20) என்பவர்தான் ஈஸ்வரியை கடத்திச் சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் கடத்தப்பட்ட ஈஸ்வரியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் தேனி அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (32). சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் குபேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதப்பாண்டி அருகே வீட்டின் மேஜையை உடைத்து 3 செல்போன் திருடிய வாலிபரை ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த இறச்சக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது53). தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து வெளியேச் சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையன் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் மனோகரன் வீட்டில் செல்போன் திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு சிரைப்பாறை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக உறங்கிக் கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் வீட்டின் கதவை தட்டினார். வெளியே வந்த சித்ராவின் கையை பிடித்து இழுந்து தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம் போட்டு வெளியேறும் படி கூறினார்.

    அந்த நேரத்தில் குபேந்திரன் வந்து விடவே சுரேசை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் குபேந்திரனை தாக்கி கொலை மிட்டல் விடுத்தார். இது குறித்து சித்ரா கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது28). இவரும் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி (45), வினோத்குமார்(25) மற்றும் ராகுல் (19) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தொண்டமாநத்தம் எஸ்.எஸ். நகரில் மதுகுடித்தனர். அப்போது திடீரென கிருஷ்ணனுக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனி உள்பட 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பழனி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளை மோதுவது போல் சென்ற தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது நண்பர் முகமது சலீம்(29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராஜா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த கனகராஜ்(29) என்பவர், மணிகண்டன் மீது மோதுவது போல் சென்றார்.

    இதனால் மணிகண்டனும் முகமது சலீமும் கனகராஜிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் தனது நண்பர் சதீசுடன்(28) சேர்ந்து மணிகண்டனையும், முகமது சலீமையும் தாக்கினார். அப்போது அவர்களும் கனகராஜ், சதீஷ் ஆகியோரை தாக்கினர். இதற்கிடையே கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி கனகராஜ், சதீஷ் மற்றும் முகமது சலீம் ஆகியோரை கைது செய்தனர்.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 38) கட்டிட தொழிலாளி. அவருடன் அதே கிராமத்தைச்சேர்ந்த தேசூ (40), சரவணன் (28) ஆகியோர் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு சிக்கன் பகோடா கடை முன்பாக தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மேல் மருவத்தூர் சாலையில் இருந்து வந்தவாசி நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் தீயணைப்பு நிலைய பின் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அதிவேகமாகவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது உரசியபடி சென்றுள்ளனர்.

    தொழிலாளர்கள் 3 பேரும் ஏன் இது போல் வேகமாக செல்கின்றீர்கள் என தட்டி கேட்டனர். அதற்கு 4 வாலிபர்களும் அப்படித்தான் செல்வோம் உன்னால் என்ன பன்ன முடியும் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெருமாளை முகத்தின் மீது தாக்கியுள்ளனர்.

    தடுக்க வந்த தேசூ, சரவணன் ஆகியோரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பெருமாள் உள்ளிட்ட 3 பேரும் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பெருமாள் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து. தீயணைப்பு நிலையம் பின் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    திருவிழாவில் நடனமாடிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் அடுத்த நீடாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பரப்பனமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா. அதே ஊரை சேர்ந்தவர் முருகையன். கடந்த 3-ந்தேதி அப்பகுதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சூர்யா நடனமாடி உள்ளார். இதனை முருகையன் தடுத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செந்தில்குமார் வீடு வழியாக முருகையன் சென்றபோது அவரை வழி மறித்த செந்தில்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகனை தேடி வருகிறார்.

    வாங்கிய கடனை திருப்பி தராததால் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வாலிபர், காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராகீம்(வயது 26). இவர், சொந்தமாக தொழில் செய்வதற்காக தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அமீன்(26) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை கடனாக பெற்றதாகவும், அதில் ரூ.11 லட்சத்தை இப்ராகீம் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் மீதம் உள்ள ரூ.9 லட்சம் கடனை திருப்பி தராமல் இப்ராகீம், மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. ஓராண்டு மலேசியாவில் இருந்த இப்ராகீம், தனது குடும்பத்தினரை பார்க்க சென்னைக்கு திரும்பி வந்தார்.

    இதை அறிந்த அமீன், தனது தம்பி தமீம்(25), நண்பர் சாகுல் உள்பட 3 பேருடன் காரில் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இப்ராகீம், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவரை அமீன் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி, தாம்பரத்துக்கு கடத்திச்சென்றார்.

    அங்கு தனக்கு தரவேண்டிய ரூ.9 லட்சம் பணத்தை திரும்பி தரவேண்டும் என்று கேட்டு மிரட்டினார். பின்னர் இப்ராகீமின் தந்தை சாகுல்அமீத்திற்கு போன் செய்த அவர், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தபோது சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்து விட்டார்கள். உடனே ரூ.9 லட்சம் பணத்தை கொண்டு வரவேண்டும் என்று தந்தையிடம் கூறும்படி இப்ராகீமிடம் வற்புறுத்தினார்.

    ஆனால் செல்போனை வாங்கி பேசிய இப்ராகீம், தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும், ரூ.9 லட்சம் பணம் கேட்பதாகவும் தந்தையிடம் கூறினார்.

    மேலும் பணத்தை தராமல் போலீசுக்கு சென்றால் இப்ராகீமை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    அதற்கு இப்ராகீமின் தந்தை சாகுல்அமீது, தற்போது ரூ.9 லட்சம் இல்லை. ரூ.3 லட்சம் மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை தாம்பரம் கொண்டுவருமாறு கூறினர். அதற்கு சாகுல்அமீது, அங்கு வரமுடியாது. திருவல்லிகேணிக்கு வந்தால் பணத்தை தருவதாக கூறினார்.

    பின்னர் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருமாறு கூறிய சாகுல்அமீது, இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து தாம்பரத்தில் இருந்து காரில் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் தனது தம்பி தமீமுடன் இப்ராகீமை அனுப்பி வைத்து, பணத்தை வாங்கி வரும்படி கூறிய அமீன் உள்பட 3 பேரும் காரில் இருந்தனர். அதன்படி அங்கு சென்ற தமீமை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, இப்ராகீமை பத்திரமாக மீட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அமீன் உள்பட 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அமீன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். #tamilnews
    வள்ளியூரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது30). நரிக்குறவரான இவர் ஊர் ஊராக சென்று பாசி விற்று வந்தார். இவரது மனைவி கவுசல்யா (20). இவரும் கணவருடன் சேர்ந்து பாசி விற்க செல்வது வழக்கம்.

    இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நேற்றிரவு முத்துராஜும், கவுசல்யாவும் நாகர்கோவில் சென்றனர். அங்கு ஒரு சினிமா தியேட்டரில் அவர்கள் படம் பார்த்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பலத்த காயம் அடைந்த கவுசல்யா மயங்கி விழுந்தார். உடனே கவுசல்யாவை, முத்துராஜ் ஒரு ஆட்டோவில் ஏற்றி குறவர் காலனிக்கு வந்தார். அங்கு வீட்டில் அவரை இறக்கி போட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இதனிடையே மயக்க நிலையில் இருந்த கவுசல்யா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை முத்துராஜ் எழுந்து பார்த்த போது கவுசல்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முத்துராஜ், கவுசல்யாவின் உடலை அங்கிருந்து வெளியில் கொண்டு செல்ல திட்ட மிட்டார்.

    இதற்காக ஒரு வாகனத்தை வரவழைத்து அதில் கவுசல்யாவின் உடலை ஏற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் முத்துராஜிடம் கேட்டபோது, அவர் மழுப்பலான பதில்களை கூறியுள்ளார்.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே முத்துராஜ் அங்கிருந்து தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்பு அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கட்டி வைத்ததில் காயம் அடைந்த முத்துராஜை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து கவுசல்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துராஜிடம் விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக கவுசல்யாவை அவர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பங்களா பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மாயக்காள் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவரது மகன் சுரேஷிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் மாத வட்டியை சரியாக கொடுத்து வந்ததாகவும், ஆனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கந்து வட்டி கேட்டு தாக்கியதாக மாயக்காள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினார். சுரேஷ், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை, போலீசார் கைது செய்தனர்.

    பழனி அருகே இரு வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி:

    பழனி பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பஸ்நிலையத்தில் இருந்து வெளியே சென்று கொண்டு இருந்தார். அப்போது கோவையில் இருந்து பழனி வந்த அரசு பஸ் வாலிபர் மீது மோதியதில் கால் தவறி விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் தலை நசுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    விருப்பாட்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு வாலிபர் உயிரிழந்தார் அவர் நீல நிற சட்டையும், கரு நீல வண்ணத்தில் அரைக்கால் ட்ரவுசரும் அணிந்திருந்தார்.

    இது குறித்து சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×