search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed wife"

    கோவையில் இன்று காலை தகராறில் மனைவி கழுத்தை துண்டால் இறுக்கி கொன்ற கணவரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை ஆவாரம் பாளையம் இளங்கோ நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(68). இவரது மனைவி செல்வி(60). இவர்களுக்கு பிரபாகரன்(34) என்ற மகனும் 2மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். 

    சத்தியமூர்த்தி, செல்வி ஆகியோர் மகன் பிரபாகரனுடன் வசித்து வருகிறார்கள். இன்று காலை வீட்டில் இருந்த சத்தியமூர்த்தி, செல்வி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி துண்டால் தனது மனைவி செல்வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களாகவே செல்வியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு சத்தியமூர்த்தி தகராறு செய்தது தெரியவந்தது.

    சேலம் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற கணவரின் செயல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதேஸ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் இரும்பாலை தளவாய்ப்பட்டியை சேர்ந்த வடிவேல்- பச்சியம்மாள் தம்பதியின் மகள் சசிகலா(23) என்பவருடன் திருமணம் நடந்தது.

    கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா 7-வது மாதத்தில் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதேஸ் தனது மனைவி சசிகலாவை ஏன்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    மாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் இறைச்சி எடுத்து சமைத்து வைத்தனர்.

    நேற்று மாலையில் மாதேஸ் தளவாய்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் அவரது தாயார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.

    இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காழியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.

    இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.

    இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த பச்சியம்மாள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவர், எனது மகளை விட்டு விடு என கெஞ்சினார். ஆனாலும் மாதேஸ் கேட்கவில்லை. மிருக தனமாக காலால் மிதித்து, கழுத்தை இறுக்கினார்.

    உடனே பச்சியம்மாள் எனது மகளை கொலை செய்கிறான். யாராவது ஓடி வாருங்கன் என கூச்சல் போட்டார். ஆனால், அதற்குள் மாதேஸ், சசிகலாவை கொலை செய்து விட்டார்.

    உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    வள்ளியூரில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது30). நரிக்குறவரான இவர் ஊர் ஊராக சென்று பாசி விற்று வந்தார். இவரது மனைவி கவுசல்யா (20). இவரும் கணவருடன் சேர்ந்து பாசி விற்க செல்வது வழக்கம்.

    இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நேற்றிரவு முத்துராஜும், கவுசல்யாவும் நாகர்கோவில் சென்றனர். அங்கு ஒரு சினிமா தியேட்டரில் அவர்கள் படம் பார்த்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பலத்த காயம் அடைந்த கவுசல்யா மயங்கி விழுந்தார். உடனே கவுசல்யாவை, முத்துராஜ் ஒரு ஆட்டோவில் ஏற்றி குறவர் காலனிக்கு வந்தார். அங்கு வீட்டில் அவரை இறக்கி போட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இதனிடையே மயக்க நிலையில் இருந்த கவுசல்யா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை முத்துராஜ் எழுந்து பார்த்த போது கவுசல்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முத்துராஜ், கவுசல்யாவின் உடலை அங்கிருந்து வெளியில் கொண்டு செல்ல திட்ட மிட்டார்.

    இதற்காக ஒரு வாகனத்தை வரவழைத்து அதில் கவுசல்யாவின் உடலை ஏற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் முத்துராஜிடம் கேட்டபோது, அவர் மழுப்பலான பதில்களை கூறியுள்ளார்.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே முத்துராஜ் அங்கிருந்து தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்பு அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கட்டி வைத்ததில் காயம் அடைந்த முத்துராஜை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து கவுசல்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்துராஜிடம் விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக கவுசல்யாவை அவர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×